கிரிக்கெட் போட்டி: கே.ஆர்.சி.சி., மேனகா மில்ஸ்  அணிகள் வெற்றி

தேனி, மே11–

மாவட்டத்தில் அளவில் நடந்த கிரிக்கெட் லீக் போட்டிகளில் கே.ஆர்.சி.சி., மேனகா மில்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.

தேனி மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் ‘ஏ’ டிவிஷன் லீக் போட்டிகள் நடந்து வருகிறது. தேனியில் நடந்த போட்டியில் எவர்கிரீன் அணி மற்றும் கே.ஆர்.சி.சி., அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த எவர்கிரீன் அணி 45.5 ஓவர்களில் 254 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. ஜெயக்குமார் 49 ரன்களும், விக்கி 44 ரன்களும் எடுத்தனர். கே.ஆர்.சி.சி., அணி 32 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்திருந்தது. மழையால் போட்டி நிறுத்தப்பட்டது. டக்வொர்த் -லூயிஸ் கணக்கின் படி கே.ஆர்.சி.சி அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது. அணி வீரர்கள் முத்துமாறன் 75, ராகுல் 46 ரன்கள் எடுத்தனர்.மற்றொரு போட்டியில் மேனகா மில்ஸ் அணி மற்றும் மெஷின் கன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மேனகா மில்ஸ் அணி 50 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 267 ரன்கள் எடுத்தது. விசித்திரன் 51 ரன்கள் எடுத்தார். சேசிங் செய்த மெஷின் கன்ஸ் அணி 43.5 ஓவர்களில் 179 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது. கார்த்திக் 88 ரன்கள் எடுத்தார். மேனகா மில்ஸ் அணி வீரர் தியாகு 4, வெங்கடேசன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Advertisement