மாவட்டத்தில் டிஜிட்டல் பேனர் கலாசாரம் மீண்டும்… அதிகரிப்பு : ஆளுங்கட்சியினருக்கு கரிசனம் காட்டும் அதிகாரிகள்
- நமது நிருபர் -:
விழுப்புரம் மாவட்டத்தில் ஆளுங்கட்சியினரின் டிஜிட்டல் பேனர் வைக்கும் கலாசாரம் அதிகரித்துள்ளதை தடுக்காமல், அதிகாரிகள் மவுனம் காத்து வருகின்றனர்.
தமிழகத்தில் அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ள து. ஆனால், விழுப்புரம் மாவட்டத்தில் இதை அரசியல் கட்சியினர், தனி நபர்கள் பின்பற்றாமல், பிறந்த நா ள், திருமண விழா, அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வருகைக்கு டிஜிட்டல் பேனர் வைக்கும் கலாசார ம் தொடர்ந்து வருகின்றது.
அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் வைக்கும் நபர்கள் மீது போலீசார் அவ்வப் போது வழக்கு பதிந்து வருகின்றனர். ஆனால், இந்த நடவடிக்கையை போலீசார் தொடர்ந்து மேற்கொள்வது கிடையாது. இதனால், தற்போது மாவட்டத்தில் டிஜிட்டல் பேனர் கலாசாரம் மீண்டும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, புதியதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க., அரசிற்கு ஆதரவாக அக்கட்சியினர் டிஜிட்டல் பேனர் வைப்பதில் ஆர்வம் காட்டி வருகின் றனர்.
மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களில் சாலையின் இருபுறங்களிலும் போக்குவரத்திற்கு இடையூறாகவும் மற்றும் பொது சுவர்களிலும் அனுமதியின்றி தமிழக முதல்வர் விஜய் போட்டோவுடன் மெகா சைஸ் பேனர்களை வைத்துள்ளனர். இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
ஆளுங்கட்சியினரின் இந்த டிஜிட்டல் பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்காமல் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் கரிசனம் காட்டி வருகின்றனர்.
இது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கலெக்டர் மற்றும் எஸ்.பி., அலுவலகங்கள் உள்ள மாவட்ட தலைநகரான விழுப்புரத்தில் உள்ள சென்னை நெடுஞ்சாலை, திருச்சி நெடுஞ்சாலை, புதுச்சேரி சாலை உள்ளிட்ட சாலைகளிலும் டிஜிட்டல் பேனர் கலாசாரம் அதிகரித்துள்ளது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியு ள்ளது.
மேலும், தங்கள் ஆட்சியில் டிஜிட்டல் பேனர் வைத்தால் அகற்றிய மாவட்ட நிர்வாகம், போலீசார் தற்போது ஏன், அலட்சியமாக இருக்கின்றனர் என அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எனவே, மாவட்டத்தில் அதிகரித்துள்ள ஆளுங்கட்சியினரின் டிஜிட்டல் பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
சால்வை வேண்டாம், எலுமிச்சம் பழம் போதும் நிர்வாகிகளுக்கு வசந்தம் ‘அட்வைஸ்’
-
போத்துவாய் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
-
ஆத்தங்கரைப்பட்டி ஊராட்சியில் உப்பு நீரால் கல் அடைப்பு பாதிப்பு கண்டு கொள்ளாத அதிகாரிகளால் பொதுமக்கள் அவதி
-
சூரியன் ஒருபோதும் மறையாது... மறுபடியும் உதிக்கும்; சொல்கிறார் உதயநிதி
-
கலெக்டர் அலுவலகம் அருகே போலீஸ் அவுட் போஸ்ட் அமைக்கப்படுமா?
-
பதவி பறிக்கப்பட்டாலும் நிர்வாகிகளை தன்பக்கம் வலைத்துப் போட்ட ‘மாஜி’ பழனிசாமி அணியினர் அதிர்ச்சி