சில்வர் பீச்சில் குவிந்த பொதுமக்கள்
கடலுார்: கோடை வெயிலால் நேற்று தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் பொதுமக்கள் குவிந்தனர்.
கத்தரி வெயில் தொடங்கி சுட்டெரித்து வருகிறது. மாவட்டத்தில், துவக்கத்திலேயே கடும் வெயில் பொது மக்களை வாட்டி வதைத்தது.
இதற்கிடையே இலங்கை அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரண மாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்தது. அத்துடன் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்திருந்தது.
நேற்று மீண்டும் அக்கினி வெயில் சுட்டெரித்தது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலும், பள்ளிகள் விடுமுறையில் இருப்பதாலும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் சில்வர் பீச்சில் காற்று வாங்க குவிந்தனர். அங்குள்ள விளையாட்டு திடலில் பள்ளி மாணவர்கள் விளையாடி மகிழ்ந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோவிந்தசாமி சிலைக்கு எம்.எல்.ஏ., மாலை அணிவிப்பு
-
பெண்ணிடம் செயின் பறிப்பு போலீஸ் தீவிர விசாரணை
-
சால்வை வேண்டாம், எலுமிச்சம் பழம் போதும் நிர்வாகிகளுக்கு வசந்தம் ‘அட்வைஸ்’
-
போத்துவாய் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
-
ஆத்தங்கரைப்பட்டி ஊராட்சியில் உப்பு நீரால் கல் அடைப்பு பாதிப்பு கண்டு கொள்ளாத அதிகாரிகளால் பொதுமக்கள் அவதி
-
சூரியன் ஒருபோதும் மறையாது... மறுபடியும் உதிக்கும்; சொல்கிறார் உதயநிதி
Advertisement
Advertisement