தேசிய சிலம்ப போட்டியில் பதக்கங்கள் வென்ற மதுரை வீரர்கள்

திருப்பரங்குன்றம்: கேரளா மாநிலம் இடுக்கி வண்டிப்பெரியாறு யூ.பி. பள்ளி சார்பில் தேசிய சிலம்பப் போட்டிகள் நடந்தன. அதில் மதுரை சாதனை சிறகுகள் சிலம்பாட்ட கழக வீரர்கள் பதக்கங்களை குவித்தனர்.

ஒற்றைக்கம்பு பிரிவு ஜோஹித் கேசவ், யுகேஷ் கேசவ், பிரசன்னா, சேவக மூர்த்தி, நித்யஸ்ரீ, விஷ்ணுப்ரியா, ஷர்மிளா, ஜனனி, சிவசங்கர், தேவதர்ஷன், கீர்த்திகா, பானு, கோகுல், சர்வஜித் குமரன், ஸ்ரீவர்ஷன், கிருவேஷ், லிஸானி, சபர்னிகா, தன்ஷிகா, அகல்யா தங்கப்பதக்கங்கள் பெற்றனர். பங்கேற்ற 20 வீரர்களும் தங்கப்பதக்கம் வென்றனர்.

இரட்டைக் கம்பு பிரிவு ஜோஹித் கேசவ், பிரசன்னா, நித்யஸ்ரீ, சேவகமூர்த்தி, கிருவேஷ், விஷ்ணுப்ரியா, ஷர்மிளா, ஜனனி, கோகுல், சர்வஜித் குமரன், தன்சிகா, சபர்னிகா தங்க பதக்கங்கள் வென்றனர். யுகேஷ் கேசவ், ஸ்ரீவர்ஷன், சிவசங்கர், தேவதர்ஷன், கீர்த்திகா, பானு, லிசானி, அகல்யா வெள்ளி பதக்கங்கள் வென்றனர்.

சுருள் கத்தி பிரிவு ஜோகித் கேசவ், யுகேஷ் கேசவ், பிரசன்னா, நித்யஸ்ரீ, சேவகமூர்த்தி, விஷ்ணு பிரியா, ஷர்மிளா, ஜனனி, சிவசங்கர், தேவதர்சன், கீர்த்திகா, பானு, கோகுல், சர்வஜித் குமரன் ஆகியோர் தங்க பதக்கங்கள் வென்றனர். ஸ்ரீ வர்ஷன், கிருவேஷ், லிஷாணி, சபர்னிகா, தன்ஷிகா, வெள்ளி பதக்கங்கள், அகல்யா, வெண்கல பதக்கம் வென்றனர்.

பதக்கங்கள் வென்ற வீரர்களை ஆசான் தங்கப்பாண்டி, பயிற்சியாளர்கள், பெற்றோர் பாராட்டினர்.

Advertisement