மண் கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு வாகனங்கள் பறிமுதல்
தர்மபுரி: தர்மபுரி புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் புவன மாணிக்கம் நேற்று முன்தினம் இரவு, 11:40 மணிக்கு அரூர் - தர்ம
புரி நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்-போது, அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், 4 யூனிட் அளவிற்கு கிராவல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது. டிரைவர் தப்பிச்சென்ற நிலையில், டிப்பர் லாரியை பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தார்.
அதே போல், தர்மபுரி - மொரப்பூர் சாலையில் அக்கமனஹள்ளி பெருமாள் கோவில் அருகே, ஒரு யூனிட் கிராவல் மண் கடத்தி வந்த, சோனாலிகா டிராக்டரை பறிமுதல் செய்தனர். தப்பிச்சென்ற டிரைவர் குறித்து, மதிகோன்பாளையம் போலீசார் விசாரிக்கின்-றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement