தொடர்ந்து 24 மணி நேரம் சிவநாம ஜபயக்னம்
கெலமங்கலம்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே ஒன்னுகுறிக்கி கிராமத்தில், நாகலிங்கேஸ்வர சுவாமி ஆஸ்ரமம் உள்ளது.
இங்கு, 25ம் ஆண்டு சிவநாம ஜபயக்னம் (சிவபெருமானின் திருநாமங்-களை உச்சரிப்பது) விழா நேற்று நடந்தது. காலை, 6:00 மணிக்கு நாகலிங்கேஸ்வர சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து காலை, 10:00 மணிக்கு, சிவநாம ஜபயக்னம் துவங்கி-யது. இன்று (மே 17) காலை, 10:00 மணி வரை தொடர்ந்து, 24 மணி நேரம், சிவநாம ஜபயக்னம் நடக்கிறது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement