இருதரப்பினர் தகராறு: 4 பேர் மீது வழக்கு
ராயக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே முகலுார் கிரா-மத்தை சேர்ந்தவர் முனியப்பன், 27, டிரைவர்; இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பிரவீன்குமார், 25, குடும்பத்தினருக்கும் இடையே, சொத்து பங்கீடு தொடர்பாக தகராறு உள்ளது. நேற்று முன்தினம் மதியம், 1:00 மணிக்கு, தன் சரக்கு வாகனத்தில் புதுப்-பட்டி பிரிவு சாலை அருகே, முனியப்பன் சென்றார். அப்போது, அவரது வாகனத்தை வழிமறித்த பிரவீன்குமார் தரப்பு, முனியப்-பனை தகாத வார்த்தையால் திட்டி, வாகனத்தின் முன்புற கண்ணா-டியை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனர்.
முனியப்பன் புகார் படி, பிரவீன்குமார் மற்றும் அவரது தாய் உமா, 47, ஆகிய இருவர் மீதும், ராயக்கோட்டை போலீசார் வழக்-குப்பதிந்தனர். அதேபோல், உமா புகார் படி, முனியப்பன் மற்றும் ராஜா, 30, ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மீனாட்சி அம்மன் அலங்காரத்தில்வெண்டாங்கி ஜோதி மாரியம்மன்
-
வீட்டில் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம்; சர்ச்சையில் தவெக பெண் எம்எல்ஏ
-
செயற்கை நிறமிகளுக்கு மாற்றாக நுண்ணுயிர் நிறமிகள் உருவாக்கம்
-
முதல்வர் விஜய் போட்டோ வைக்க மறுப்பு; அடம் பிடிக்கிறார் கோவை தி.மு.க., மேயர்
-
மாநிலங்களுக்கு ரூ.90,000 கோடி கடன்: வட்டியின்றி வழங்குகிறது மத்திய அரசு
-
அம்மா உணவக மேம்பாடு: ஜெ. ஆன்மா விஜயை பாராட்டும்
Advertisement
Advertisement