பெண்ணிடம் தாலி பறிப்பு

காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த அத்தனுார் கிரா-மத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி தங்கதுரை, 52, இவரது மனைவி புவனேஸ்வரி, 49. நேற்று முன்தினம், 15ம் தேதி வீட்டின் வெளியில் உள்ள வராண்டாவில் துாங்கி கொண்டிருந்-தனர்.

அப்போது இரவு, 1:40 மணிக்கு புவனேஸ்வரி கழுத்தில் இருந்த தாலிக்கயிறை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அறுத்து கொண்டு தப்பினார். இதில், தாலி, குண்டு மற்றும் தாலி-காசு என ஒன்றரை பவுன் இருந்தது. இது குறித்து, புவனேஸ்வரி அளித்த புகார் படி, காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement