‘உள்விளையாட்டு அரங்கங்கள் கட்டுமானம் துரிதப்படுத்துங்க’

கோவை: கோவை நேரு ஸ்டேடியம் எதிரே மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் கட்டப்படுகின்றன.

மாநகராட்சி பொது நிதியில் ரூ.2 கோடியில் வாலிபால் உள்விளையாட்டு அரங்கம், மேற்கூரை, கோவை எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.40 லட்சத்தில் பார்வையாளர்களுக்கான கேலரி, தனியார் நிறுவன பங்களிப்புடன் ரூ.1.5 கோடியில் மேற்கூரையுடன் இறகுப்பந்து விளையாட்டு அரங்கம், அதே மைதானத்தில் வுசூ தற்காப்பு கலை கற்பிக்கும் வகையில், ரூ.96 லட்சத்தில் உள்விளையாட்டு அரங்கம் கட்டப்படுகின்றன. 

இப்பணிகளை, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று ஆய்வு செய்தார். உதவி கமிஷனர் சண்முகம், உதவி பொறியாளர் சதீஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இன்னும் சுற்றுச்சுவர் கட்ட வேண்டியிருக்கிறது; ‘ப்ளோர் மேட்’ விரிக்க வேண்டியுள்ளது. இவ்விரு பணிகளையும் 10 நாட்களுக்குள் விரைந்து முடிக்க கமிஷனர் அறிவுறுத்தினார்.

‘ப்ளோர் மேட்’ ஆர்டர் கொடுக்கப்பட்டு உள்ளது; 2 நாட்களில் வந்ததும் விரிக்கப்படும். சுற்றுச்சுவர் கட்டும் பணி துரிதப்படுத்தப்படும் என, ஒப்பந்த நிறுவனத்தினர் உறுதி அளித்தனர்.

Advertisement