உச்சிமாகாளியம்மன் கோவில் திருவிழா

உடுமலை: உடுமலை உச்சிமாகாளியம்மன் கோவில் திருவிழா துவங்கியுள்ளது.

உடுமலை சீனிவாசா வீதி ஸ்ரீ உச்சிமாகாளியம்மன் கோவில் திருவிழா, நேற்று முன்தினம் சக்தி கும்பம் அழைத்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று, மாவிளக்கு திருவீதி ஊர்வலம், பூவோடு எடுத்தல் மற்றும் கும்பம் கங்கையில் விடுதல்  நிகழ்ச்சிகள் நடந்தன.

இதில், உடுமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் இன்று, தெய்வ குளம் காளியம்மன் கோவிலுக்கு தீர்த்தம் எடுத்துச்செல்லுதல் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Advertisement