சிறுமுகை போதை மறுவாழ்வு மையத்துக்கு  கடந்தாண்டு அனுப்பப்பட்ட 30 சிறார்கள்

கோவை: குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் சிறார்களில், போதை பழக்கம் இருப்பின் சிறுமுகையில் உள்ள போதை மறுவாழ்வு மையத்திற்கு இளைஞர் நீதிக்குழுமம் சார்பில், அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

 குற்றம் புரிந்ததாக கருதப்படும் குழந்தைகளை சட்டரீதியாக கையாளுவது, அவர்களை நல்வழிப்படுத்துவது, உரிமைகளை பெற்றுத்தருவது போன்ற நோக்கத்துடன்  மாவட்டந்தோறும் இளைஞர் நீதிக்குழுமம், நீதிபதி தலைமையில் செயல்படுகிறது. 

சமீப காலங்களில், பள்ளி மாணவர்கள் மத்தியிலும் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதன் தாக்கத்தால் குற்றச்சம்பவங்களில் பலர் ஈடுபடுகின்றனர். குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு, வருபவர்களுக்கு இளைஞர் நீதிக்குழுமம் சார்பில் தொடர் கவுன்சிலிங் அளிக்கப்படுகிறது. 

இதில், போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து விடுபட முடியாமல் தவிக்கும் மாணவர்கள் மீட்பு மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். கோவையில் கடந்த ஆண்டு 30 சிறார்கள் போதைப்பொருள் மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 

மாவட்ட இளைஞர்  நீதிக்குழு உறுப்பினர் ஜெனிபர் புஷ்பலதா  கூறுகையில், ‘‘குழந்தைகள் பாதுகாப்பு துறை சார்பில், சிறுமுகையில் பிரத்யேக போதைப்பொருள் மறுவாழ்வு மையம் சிறப்பாக செயல்படுகிறது.

குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் சிறார்களில் பலர், போதைப்பொருள் பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர். இவர்களை நல்வழிப்படுத்த இம்மையங்களுக்கு அனுப்புகின்றோம். இப்பழக்கத்தில் இருந்து விடும்படும் வரை அங்கு வைத்து பராமரிக்கப்படுவார்கள்,’’ என்றார்.



குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் சிறார்களில் பலர், போதைப்பொருள் பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர். இவர்களை நல்வழிப்படுத்த இம்மையங்களுக்கு அனுப்புகின்றோம். இப்பழக்கத்தில் இருந்து விடும்படும் வரை அங்கு வைத்து பராமரிக்கப்படுவார்கள்.

@block_B@ ‘பிள்ளைகளின் நண்பர்கள் யார், யார்; அறிவது நல்லது’ ‘‘பெற்றோர் பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். பிள்ளைகளின் பழக்கவழக்கங்கள், நண்பர்கள் யார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் சிறார்களுக்கு, தொழில் சார்ந்த பயிற்சி அளிக்கவும், தனியார் நிறுவனங்களின் உதவியுடன் வாய்ப்பு அளிக்கின்றோம், ’’ என்றார் ஜெனிபர் புஷ்பலதா. block_B

Advertisement