நல்லேந்தலில் ஜல்லிக்கட்டுகாளை முட்டி 18 பேர் காயம்

சிவகங்கை,மே 14-

காளையார்கோவில் அருகே நல்லேந்தல் கிராமத்தில் தர்ம முனீஸ்வரர் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு  ஜல்லிக்கட்டு நடந்தது.

சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 373 காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க ஒரு சுற்றுக்கு 20 மாடுபிடி வீரர்கள் வீதம் 4 சுற்றுக்கு 80 மாடு பிடி வீரர்கள் களம் இறக்கப்பட்டனர்.

அடங்க மறுத்த காளை உரிமையாளருக்கும் அடக்கிய வீரர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. மாடு முட்டியதில் 18 பேர் காயம் அடைந்தனர். நல்லேந்தல் ரவி 45, மதுரை மாவட்டம் நைத்தான்பட்டி முத்துவேல் 37, திருமோகூர் சரவணன் 38, பெரியகண்ணனுார் கண்ணகிபுரம் பெரியய்யா 65 ஆகியோர் மேல்சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.        

Advertisement