பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம்; இன்று இத்தாலி பிரதமர் மெலோனியுடன் சந்திப்பு
நமது நிருபர்
இத்தாலிக்கு இன்று செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்திக்கிறார்.
மேற்காசியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள ஐந்து நாடுகளுக்கு அரசு முறை பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். முதலாவதாக ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு சென்ற நிலையில், இரண்டாவதாக நெதர்லாந்துக்கு அவர் சென்றார். மூன்றாவது நாடாக ஐரோப்பிய நாடான ஸ்வீடனுக்கு பிரதமர் மோடி சென்றார்.
ஸ்வீடன் பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சனை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்தியா - ஸ்வீடன் உறவில் ஆற்றிய பங்களிப்பு மற்றும் பிரதமர் மோடியின் தலைமை பண்பை பாராட்டி, அவருக்கு, ஸ்வீடனின் மிக உயரிய விருதான, 'ராயல் ஆர்டர் ஆப் தி போலார் ஸ்டார், டிகிரி கமாண்டர் கிராண்ட் கிராஸ்' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
முக்கிய ஆலோசனை
ஸ்வீடன் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி நார்வே சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடிக்கு நார்வேயின் உயிரிய விருது வழங்கி அந்நாடு கவுரவித்தது. ஓஸ்லோவில் நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரேவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
@twitter@https://x.com/narendramodi/status/2056566281852334354?s=20twitterஇது குறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஓஸ்லோவில் பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரேயுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டேன். ஆராய்ச்சி, கல்வி, சுகாதார சேவைகள் மற்றும் திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் உள்ள துறைகளில் உள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து நாங்கள் விவாதித்தோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இத்தாலிக்கு பயணம்
பிரதமர் மோடி 5 நாடுகளுக்கான தமது 6 நாள் பயணத்தின் இறுதிக் கட்டமாக இன்று இத்தாலி செல்கிறார். இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி அழைப்பின் பேரில் இப்பயணத்தை அவர் மேற்கொள்கிறார். அங்கு பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்து இருதரப்பு உறவை வலுப்படுத்துவது மற்றும் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
மோடி செல்வது நாட்டு நலனுக்காக, ராகுல், ஸ்டாலின் செல்வது சுய........
புண்பட்ட மனசை புரையாற்ற போனால் இப்படி கலாய்க்கறீங்களே... கல்நெஞ்சுக்காரய்ங்கயா நீங்கல்லாம்
இது வரை மெலோனி பதவி ஏற்றதில் 2022 இருந்து 7 முறை சந்தித்து இருக்கிறார் ... இத்தாலியில் இருந்து இந்தியாவுக்கு ஏழுமடங்கு வர்த்தகம் கூடி இருக்குமோ ???
உஷ்ஷ்ஷ்ஷ்... நீங்க என்ன நெனைக்கறேள்னு புரியறது... அப்பிடியெல்லாம் யோசிக்கப்பிடாது....
இது வரை மெலோனி பதவி ஏற்றதில் 2022 இருந்து 7 முறை சந்தித்து இருக்கிறார் ... இத்தாலியில் இருந்து இந்தியாவுக்கு ஏழுமடங்கு வர்த்தகம் கூடி இருக்குமோ ??
அங்கே என்ன மெடல்?
ஏற்கனவே புண்பட்ட மனசை போட்டு படுத்தாதீங்கோ
ஊர் ஊரா போய் உயரிய விருதா வாங்கிக்கிட்டு இருக்கார். இங்கே எண்ணெய் நிறுவனங்கள் கொஞ்சம் கூட மதிக்காம ரெண்டு தடவை விலையை ஏத்திட்டாங்க
அதானே... நீங்களாவது புரிஞ்சிகிட்டதுல சந்தோஷம்
விலை குறைப்புக்கு மட்டுமே ஜி காரணம்
விலை உயர்த்தினால் எண்ணெய் நிறுவனம், சர்வதேச சந்தை விலை , அதுவும் இல்லாவிட்டால் நேரு தான் காரணம்
இத்தாலியில் உயரிய விருதுக்கு ஒத்துக் கொண்டார்களா
மோடிஜி வெளிநாட்டுக்கு போன உடனே அவருக்கு தெரியாம ரெண்டு தடவை பெட்ரோல் டீசல் விலையை ஏத்திப்புட்டாங்க. இவரு என்னடான்னா திரிம்பி வரமாட்டேங்குறாரு.
அலோ அலோ அல்ல்லோ... சிக்னல் வீக்... ஒன்னும் கேக்கல...
நாட்டை அந்நியர்களுக்கு விற்றுவிட்டு மோடிக்கு ஒரே வாழத்தான் உள்ளது. வாடா இந்தியாவை அமெரிக்காவுடனும், தென் இந்தியாவை ஐரோப்பாவுடனும், மேற்கு இந்தியாவை மேற்காசிய நாடுகளுடனும் , கிழக்கிந்தியாவை சீனாவுடனும் இணைத்துவிட்டு பிரதமர் மோடியும் அரசும் கார்போரேட்டு கொள்ளையர்களுக்கு புரோக்கர் வேலை செய்யவேண்டியதுதான்
உழைக்காமல் கண்டதையும் கடத்தி வாழ்பவனுக்கும் , அந்நிய கைக்கூலிகளுக்கும் , மிரட்டுறவனுக்கும் , மத மாற்றி வியாபாரம் செய்பவனுக்கும் வாய்க்கு வந்ததை வாந்தி எடுத்து சுய இன்பம் தேடி வாழ்வதுதான் ஒரே வழி வேற ஒரு ஆணியும் புடுங்க முடியாது
எப்புடிப்பா... இவ்வளவு கூசாம கருத்துப்போடற.. திராவிஷம் முற்றிப்போச்சு ...கலி முத்திடுத்து ...தமிழ்நாட்டில் அந்நிய மதமாற்ற சக்திகளின் தாக்கம் ஜாஸ்தி.
இந்து மதத்தில் ஆரம்பித்து கொத்தடிமைகள் பலமடங்கு பெருகிவிட்டன.
மத்திய அரசு அதிகாரிகள் பல மாதங்களாக அமெரிக்காவுடன் பேசி, அதானியை காப்பாற்ற ப்ரோக்கர் வேலை மட்டும்தான் செய்ய முடிந்தது.
ரூ.2000 கோடி லஞ்சம் இந்திய மின்சாரத்துறை அமைப்புகளுக்கு தரப்பட்ட ஊழல் குறித்து விசாரணை நடத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்குமா? இல்லை ஒளிச்சி வைக்குமா?மேலும்
-
தவெக அமைச்சரவையில் இடம்பெறும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் யார்?
-
பிரிட்டனில் 23 வயதில் மேயராக தேர்வு; இந்திய வம்சாவளி இளைஞர் சாதனை
-
பொதுக்குழு முடிவை தலைவணங்கி ஏற்போம்: சிவி சண்முகம், வேலுமணி தரப்பு அறிவிப்பு
-
இண்டிகோ விமானத்தில் கோளாறு; அரை மணி நேரம் பரிதவித்த பயணிகள்
-
திருப்பூரில் வாகன சோதனையில் 200 ரூபாய் லஞ்சம் பெற்ற வீடியோ வைரல்; எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்
-
கே.புதுப்பட்டியில் பொங்கல் திருவிழா