குழாய் உடைந்து ரோட்டில் வீணாகும் குடிநீர்
ஒட்டன்சத்திரம், மே 21-
ஒட்டன்சத்திரம் வேடசந்துார் ரோடு காளாஞ்சிபட்டி மேம்பாலத்தின் கீழ் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி ரோட்டில் செல்கிறது.
ஒட்டன்சத்திரம் பகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த குழாய்களில் தண்ணீர் வரும்போது அழுத்தம் தாங்காமல் பல இடங்களில் உடைப்பு ஏற்படுகிறது. இதனால் குழாய்களில் செல்ல வேண்டிய தண்ணீர் வீணாக ரோட்டில் ஓடுகிறது. குழாயில் ஏற்பட்ட உடைப்புகள் அவ்வப்போது சீரமைக்கப்பட்ட போதிலும் ஏதேனும் ஒரு பகுதியில் மறுபடியும் உடைப்பு ஏற்படுகிறது.
ஒட்டன்சத்திரம் வேடசந்துார் ரோட்டில் காளாஞ்சிபட்டி மேம்பாலத்தின் கீழ் செல்லும் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல நாட்களாக தண்ணீர் வீணாகி வருகிறது. இதனை விரைவில் சரி செய்து தண்ணீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
கார்களின் விலையை ரூ.30 ஆயிரம் உயர்த்துகிறது மாருதி சுசூகி
-
தமிழகத்தில் தகதகக்கும் வெயில்; 16 இடங்களில் அடித்தது சதம்
-
குரு பெயர்ச்சி ஜப ஹோமம்
-
பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் பணயில் ஈடுபட்ட மின்ஊழியர்கள்
-
பொது பாதை தொடர்பாக தகராறு 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு
-
த நியூ ஜான்டூயி பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை