தினமலர் செய்தி எதிரொலி :சீரமைக்கப்பட்டது சுங்கச்சாவடி வசூலிப்பு அறை

கொடைக்கானல்:-தினமலர் செய்தி எதிரொலியாக கொடைக்கானல் நகராட்சி சுங்கச்சாவடி மையம் சீரமைக்கப்பட்டது. கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே செயல்படும் நகராட்சி சுங்கச்சாவடி மையம் நகருக்குள் நுழையும் வாகனங்களுக்கு பாஸ்டேக் முறையில் கட்டணம் வசூலிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் வாகனம் மோதி சுங்கச்சாவடி மைய நுழைவுவாயில் வசூலிப்பு அறை சேதமடைந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து சேதமடைந்த அறையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

Advertisement