கோபுரத்தில் வளர்ந்துள்ள செடிகளால் சிற்பங்கள் சேதமாகும் அபாயம்
காஞ்சிபுரம்: திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவில் ராஜகோபுரத்தில் வளர்ந்துள்ள செடிகளால், சிற்பங்கள் சேதமாகும் அபாயம் உள்ளதாக பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவில், பெருமாளின் 108 திவ்யதேசங்களில், 58வது திவ்ய தேசமாக விளங்கி வருகிறது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு தினமும் திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
முறையான பராமரிப்பு இல்லாததால், கோவில் ராஜகோபுரத்தில் ஆங்காங்கே செடிகள் வளர்ந்துள்ளன. இச்செடிகளின் வேர்கள் வேரூன்றி வளர்வதால், நாளடைவில் கோபுரத்தில் உள்ள சிற்பங்கள் சேதமடைந்தோடு, கோபுரமும் வலுவிழக்கும் சூழல் உள்ளது.
எனவே, திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவில் ராஜகோபுரத்தின் மீது வளர்ந்துள்ள செடிகளை வேருடன் அகற்ற ஹிந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும்
-
தாம்பரம் தங்கும் விடுதிகளில் நள்ளிரவில் போலீசார் சோதனை
-
ஏ.டி.எம்.,மில் நிரம்பும் பணத்தில் ரூ.25 லட்சம் திருடிய ஓட்டுநர் கைது
-
சாலையை கடக்க முயன்ற நபர் கார் மோதி பலி
-
சட்டவிரோதமாக ஓட்டு போட்டுவிட்டு அமெரிக்கா செல்ல முயன்றவர் கைது
-
35 பள்ளி வாகனங்களின் தகுதி சான்று தற்காலிக ரத்து
-
மனைவியை தாக்கிய கணவர், மாமனார் கைது