நீட் தேர்வு ரத்து கோரி காங்., ஆர்ப்பாட்டம்
கோவை: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவை கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் , மாநில அரசே நடத்த அனுமதிக்க வலியுறுத்தியும் கோஷம் எழுப்பப்பட்டது. எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காகவே, சி.பி.ஐ., இயக்குநர் பிரவீன்சூட்டுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டிருப்பதாகக் கூறி, மத்திய அரசைக் கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட, வட்டார காங்., நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement