வடமாநில வாலிபரை மிரட்டி போன், ரூ.10,000 வழிப்பறி

பெரம்பூர், மே 17–-

வடமாநில வாலிபரை மிரட்டி, மொபைல் போன், 10,000 ரூபாயை பறித்துச் சென்ற இருவரை, போலீசார் தேடி வருகின்றனர்.

மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் அசோக், 20. இவர், மாதவரத்தில் தங்கி, போர்வெல் வேலை செய்து வருகிறார். கடந்த 15ம் தேதி, சம்பள பணத்தை பெற்றுக் கொண்டு, சொந்த ஊருக்கு செல்ல பெரம்பூர் ரயில் நிலையம் வந்துள்ளார்.

டிக்கெட் கிடைக்காமல் காத்திருந்த அசோக்கிடம், மர்மநபர் இருவர் அணுகி, டிக்கெட் எடுத்து தருவதாக கூறியுள்ளனர். அவர்கள் அழைப்பின் பேரில், முரசொலிமாறன் பூங்காவுக்கு சென்ற போது, அங்கு அசோக்கை மிரட்டி, அவரிடமிருந்த மொபைல் போன், 10,000 ரூபாயை பறித்து சென்றனர்.

இதுகுறித்து, செம்பியம் காவல் நிலையத்தில், அசோக் புகார் அளித்துள்ளார். போலீசார் ‘சிசிடிவி’ கண்காணிப்பு பதிவுகளை வைத்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement