ஆபத்தான நிலையில் சுகாதார நிலையங்கள்
தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள துணை சுகாதார நிலையங்கள், போதிய வசதிகளின்றி, சிதலமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், 7 பேரூராட்சிகள் மற்றும் 10 ஊராட்சிகள் உள்ளன. 5 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஒரு அரசு பொது மருத்துவமனையும், 5 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 19 துணை சுகாதார நிலையங்களும் செயல்படுகின்றன.
துணை சுகாதார நிலையங்கள் உள்ள கட்டடங்கள், சிதிலமடைந்து மோசமான நிலையில் உள்ளது. சில நிலையங்களில், மழைநீர் ஒழுகுகிறது. பல சுகாதார நிலையங்கள் பயன்படுத்த முடியாத நிலையில், சிமென்ட் பூச்சு இடிந்து விழுந்து, கம்பிகள் வெளியே தொங்குகிறது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது.
உயிர் காப்பதற்காக பொதுமக்கள் வந்து செல்லும் இடம், ஆபத்தான நிலையில் உள்ளதால், பயத்துடனே நடமாட வேண்டியுள்ளது. அரசு அவசர நடவடிக்கை எடுக்க மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
நம் நாட்டில் முதன்முறையாக!
-
இடிந்து விழும் அபாய நிலையில் சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டி
-
திருமால்பூர் ரயில்வே நடை மேம்பாலயோரம் பள்ளத்தில் தடுப்பு அமைக்க பயணியர் கோரிக்கை
-
பாடலீஸ்வரர் கோவிலில் எல்லை கட்டுதல் உற்சவம்
-
நெல் கொள்முதல் நிலையத்தில் ராகேஷ் எம்.எல்.ஏ., திடீர் ஆய்வு
-
தீபாவளி பண்டு சீட்டு பிடித்து ரூ.42 லட்சம் மோசடி பலே ஆசாமி கைது