இடிந்து விழும் அபாய நிலையில் சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டி
பள்ளிப்பட்டு: பாண்டரவேடு கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் அபாய நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.
பள்ளிப்பட்டு ஒன்றியம் பாண்டரவேடு கிராமத்தில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதில், நகரி செல்லும் சாலையை ஒட்டியுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி நீண்டகாலமாக சேதமடைந்துள்ளது.
இந்த தொட்டியின் துாண்கள் சேதமடைந்து, இரும்பு கம்பிகள் துருப்பிடித்துள்ளன. இதனால், எந்த நேரத்திலும் மேல்நிலை நீர்த்தேக் தொட்டி இடிந்து விபம் அபாயம் உள்ளது. இந்நிலையில், சில மாதங்களாக குடிநீர் தொட்டி, பயன்பாட்டில் இருந்து கைவிடப்பட்டுள்ளது.
ஆனால், இடித்து அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளாததால், இந்த வழியாக செல்வோர் விபத்து அச்சத்தில் தவித்து வருகின்றனர்.
எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.