பாடலீஸ்வரர் கோவிலில் எல்லை கட்டுதல் உற்சவம்
கடலுார்: பாடலீஸ்வரர் கோவில் வைகாசிப் பெருவிழாவை முன்னிட்டு எல்லை கட்டுதல் உற்சவம் நடந்தது.
கடலுார், பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் தேரடியில் உள்ள வண்ணார மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
தொடர்ந்து, சோலை வாழியம்மன் கோவில் நிர்வாகம் மற்றும் மார்க்கெட் பகுதி மக்கள் சார்பில் எல்லை கட்டுதல் உற்சவம் நடந்தது.
பக்தர்கள் தீப்பந்தங்கள், ஆயுதங்கள் ஏந்திச் சென்றனர். நேற்றிரவு பிடாரி அம்மன் காப்பு கட்டுதல் உற்சவம் நடந்தது. வரும் 22ம் தேதி காலை 7:30 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது.
தினமும் வீதியுலா நடக்கிறது. வரும், 26ம் தேதி இரவு தெருவடைச்சான் உற்சவம், 30ம் தேதி காலை 6:00 மணிக்கு தேரோட்டம், 2ம் தேதி காலை திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீக நிகழ்ச்சி நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரானுக்கு எதிரான போரில் 42 விமானங்களை இழந்தது அமெரிக்கா
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு; வெள்ளி கிலோவுக்கு ரூ.15 ஆயிரம் சரிவு
-
ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றும் திட்டம் ஏதுமில்லை; சொல்கிறது நேட்டோ
-
10ம் வகுப்பு ரிசல்ட் வெளியானது; 94.31 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி
-
சவுமியா சுவாமிநாதனுக்கு லண்டன் ராயல் சொசைட்டியின் கவுரவம்
-
'சாட்ஜிபிடி'(ChatGPT)-யில் சத்குருவின் “மிராக்கிள் ஆஃப் மைண்ட்” தியான செயலி!
Advertisement
Advertisement