ஊரக வேலை உறுதி திட்டத்தை மீண்டும் அமலாக்க ஆர்ப்பாட்டம்
கோவை : மத்திய அரசால் ரத்து செய்யப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில், கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.
'20 ஆண்டுகளாக செயல்பட்ட தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை, கடந்த ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது. பதிலாக வேறு பெயரில் புதிய திட்டம் அறிவித்தது. ஆனால் திட்டம் அமலுக்கு வரவில்லை.
இதனால் கிராமப்புற ஏழைகள் வேலையும், வருமானமும் இன்றி தவிக்கின்றனர். ஆகவே திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்' என ஆர்ப்பாட்டகாரர்கள் கூறினர்.
தாசில்தார் அலுவலங்களில் மனு கொடுத்தனர். மதுக்கரை ஒன்றிய குழு சார்பில், மலுமிச்சம்பட்டி ஊராட்சி அலுவலகம் முன்பு தர்ணா நடந்தது. மா.கம்யூ. நிர்வாகிகள் மற்றும் விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேலும்
-
கல்லுாரி விடுதியில் கஞ்சா விற்ற மாணவர் உட்பட 3 பேர் கைது
-
36 பள்ளி வாகனங்களுக்கு தகுதி சான்று தற்காலிகமாக ரத்து
-
வீட்டில் கஞ்சா செடி வளர்த்த த.வெ.க., ஆதரவாளர் கைது
-
முருங்கை பாலமுருகன் கோவிலில் வைகாசி கிருத்திகை விழா விமரிசை
-
முதியவர் வீட்டில் நகைகள் திருடிய தாய், மகள் கைது
-
கங்கையம்மனுக்கு வரும் 29ல் கோடை உத்சவம் தொடக்கம்