ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றும் திட்டம் ஏதுமில்லை; சொல்கிறது நேட்டோ

2


பிரஸ்ஸல்ஸ்: ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றுவது தொடர்பாக எந்தத் திட்டமும் இல்லை என்று நேட்டோ அமைப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் கடந்த பிப்ரவரி 28ம் தேதி துவங்கியது. இந்தப் போர் காரணமாக, ஈரான் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் ஹார்முஸ் நீரிணையை முடக்கி, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை முடக்கியுள்ளது. இதன் காரணமாக, விலைவாசி அதிகரித்துள்ளது. எனவே, ஹார்முஸ் நீரிணையைக் கைப்பற்றி, கச்சா எண்ணெய் விநியோகத்தை சீராக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டார்.

இதற்காக, ஹார்முஸ் நீரிணையைப் பயன்படுத்தும் நாடுகள் தங்களின் ராணுவத்தை அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்தார். டிரம்பின் கோரிக்கையை ஏற்று நேட்டோ படைகளை அனுப்ப வேண்டும் என்று சில உறுப்பு நாடுகளும் கோரிக்கை விடுத்தன.

இந்த நிலையில், ஹார்முஸ் நீரிணையை கட்டுப்பாட்டில் எடுக்க விரும்பும் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு ஆதரவாக, எந்தவொரு திட்டத்தையும் நேட்டோ தற்போது உருவாக்கவில்லை என்று நேட்டோவின் ஐரோப்பியப் படைகளுக்கான உயர்மட்டத் தளபதி ஜெனரல் அலெக்ஸஸ் கிரின்கேவிச் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது; ஹார்முஸ் நீரிணையில் நேட்டோ செயல்படுவதற்கான நிபந்தனைகள் என்பது முற்றிலும் அரசியல் சார்ந்த முடிவாகும். முதலில் அரசியல் ரீதியான வழிகாட்டுதல் வரவேண்டும். அதன் பிறகே முறையான திட்டமிடல் நடக்கும். அரசியல் முடிவு எடுக்கப்படாததால், இதுவரையில் எந்த திட்டமும் வகுக்கப்படவில்லை, என்றார்.
32 உறுப்பு நாடுகளைக் கொண்ட நேட்டோ அமைப்பில், அமெரிக்கா, பிரிட்டன், துருக்கி, ஜெர்மனி, பிரான்ஸி, கனடா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றனர்.

Advertisement