ஈரானுக்கு எதிரான போரில் 42 விமானங்களை இழந்தது அமெரிக்கா

21


வாஷிங்டன்: ஈரானுக்கு எதிரான போரில் ஆளில்லா விமானங்கள், போர் விமானங்கள் உள்பட 42 விமானங்களை அமெரிக்க இழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானுக்கு எதிராக 'ஆபரேஷன் எபிக் பியூரி' என்ற பெயரில் அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து வருகின்றன. இந்தத் தாக்குதலில் ஈரானின் உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உபகரணங்கள் பெரும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளன. அதேவேளையில், ஈரான் நடத்திய பதில் தாக்குதலில் அமெரிக்காவும் வீரர்கள் மற்றும் ராணுவ உபகரணங்களை இழந்துள்ளது.

இந்த நிலையில், ஈரானுக்கு எதிரான போரில் இதுவரையில் 42 விமானங்களை அமெரிக்க இழந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பார்லிமென்ட் ஆய்வு சேவை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 24 ஆளில்லா விமானங்கள், 7 வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானங்கள், 4 எப்-15இ ஸ்ட்ரைக் ஈகிள் போர் விமானங்கள், வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு விமானம், தரைவழித் தாக்குதல் விமானம், ஹெலிகாப்டர், ட்ரைட்டன் ட்ரோன் என மொத்தம் 42 விமானங்கள் சேதமடைந்துள்ளன, இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

கடந்த மே 12 அன்று நடைபெற்ற பிரதிநிதிகள் சபையின் ஒதுக்கீட்டுக் குழு கூட்டத்தில், ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகளுக்கான மதிப்பீட்டுச் செலவு 2 லட்சத்து 80 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளதாக பென்டகன் அதிகாரி தெரிவித்தார்.

Advertisement