தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு; வெள்ளி கிலோவுக்கு ரூ.15 ஆயிரம் சரிவு
சென்னை: சென்னையில் இன்று (மே 20) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 960 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 18 ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு 120 ரூபாய் குறைந்து 14,750 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால் தங்கம், வெள்ளி விலை ஏற்ற, இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (மே 18) ஆபரண தங்கம், கிராம், 14,750 ரூபாய்க்கும், சவரன், 1,18,000 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 300 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்றைய நிலவரம்
நேற்று (மே 19), தங்கம் விலை கிராமுக்கு, 120 ரூபாய் உயர்ந்து, 14,870 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 960 ரூபாய் அதிகரித்து, 1,18,960 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று (மே 20) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 960 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 18 ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு 120 ரூபாய் குறைந்து 14,750 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி நிலவரம்
வெள்ளி விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 285 ரூபாய்க்கும், கிலோவுக்கு 15 ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்
மேலும்
-
புதிய வாகனத்தை இயக்கிப் பார்த்து முதல்வர் விஜய் ஆய்வு
-
அமைச்சரவையில் இடம்; விசிக, முஸ்லிம் லீக்கிற்கு தவெக அழைப்பு
-
ஈரானுக்கு எதிரான போரில் 42 விமானங்களை இழந்தது அமெரிக்கா
-
ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றும் திட்டம் ஏதுமில்லை; சொல்கிறது நேட்டோ
-
10ம் வகுப்பு ரிசல்ட் வெளியானது; 94.31 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி
-
சவுமியா சுவாமிநாதனுக்கு லண்டன் ராயல் சொசைட்டியின் கவுரவம்