கவர்னரின் பாதுகாப்பு வாகனங்கள் குறைப்பு

சென்னை: பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று, தமிழக கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர், தன் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டார்.

சர்வதேச அளவிலான எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பொருளாதார சூழலை கருத்தில் வைத்து, எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தும்படி, பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அதற்கு எடுத்துக்காட்டாக, தன் பாதுகாப்பு அணிவகுப்பில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கையை, அவர் பாதியாக குறைத்துக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து, டில்லி, மஹாராஷ்டிரா மாநில முதல்வர்கள், தங்கள் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டனர்.

அதேபோல், தமிழக பொறுப்பு கவர்னர் ராஜேந்திர அர்லேக்கரும், தன் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளார்.

அவருக்கு, 10 காவல் துறை பாதுகாப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், அந்த எண்ணிக்கை, நான்காக குறைக்கப்பட்டுள்ளது.

Advertisement