தீபாவளி சீட்டு நடத்தி ரூ.42 லட்சம் மோசடி

கடலுார்: பண்ருட்டி அருகே, தீபாவளி சீட்டு நடத்தி, 42 லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், தட்டாஞ்சாவடியை சேர்ந்தவர் ஹரிதாஸ். தீபாவளி சீட்டு நடத்தினார். மாதம், 1,000 ரூபாய் வீதம், 10 மாதங்கள் கட்டினால், தீபாவளிக்கு, 2 கிராம் தங்க நாணயம், பட்டாசு பாக்ஸ், ஸ்வீட், காரம் உள்ளிட்டவை வழங்கப்படும் என, தெரிவித்தார்.

இதை நம்பி, அவரது நண்பரான, அதே பகுதியை சேர்ந்த காளியப்பன், 2024ல், 420 பேரை தீபாவளி சீட்டில் சேர்த்துள்ளார்.

மாதாமாதம் பணம் வசூல் செய்து, 42 லட்சம் ரூபாயை, ஹரிதாசிடம் கொடுத்துள்ளார். கூறியபடி, தங்க நாணயம், ஸ்வீட், காரம், பட்டாசு ஆகியவற்றை வாடிக்கையாளர்களுக்கு அவர் வழங்கவில்லை.

ஹரிதாசை தொடர்பு கொண்டு கேட்டபோது, தருவதாக கூறி இழுத்தடித்தார். எஸ்.பி.,யிடம் காளியப்பன் அளித்த புகாரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, ஹரிதாசை கைது செய்தனர்.

Advertisement