தேர்தல் தோல்விக்கான உண்மையான காரணங்களை கண்டறியுங்கள்: 36 பேர் குழுவுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்
சென்னை: 'சட்டசபை தேர்தல் தோல்விக்கான உண்மையான காரணங்களை கண்டறிய வேண்டும்' என, 36 பேர் கொண்ட குழுவை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
சட்டசபை தேர்தலில், 59 இடங்களில் மட்டும் வென்று, தி.மு.க., தோல்வி அடைந்தது. மீண்டும் ஆட்சி அமைத்து விடுவோம் என, மிகுந்த நம்பிக்கையுடன் இருந்த ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.,வினருக்கு, இந்த தோல்வி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் முடிவுகள் குறித்து, தொகுதி வாரியாக விரிவான கள ஆய்வு செய்ய, 36 பேர் கொண்ட குழுவை, நேற்று முன்தினம் ஸ்டாலின் அறிவித்தார்.
இக்குழுவினருடன், நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, துணை பொதுச்செயலர்கள் கனிமொழி, ராஜா, பொன்முடி, அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆலோசனை கூட்டத்தில் ஸ்டாலின் பேசியது குறித்து கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:
கடந்த ஐந்தாண்டுகள் சிறப்பான ஆட்சியை நடத்தினோம். மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட, மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தினோம். ஏராளமான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தினோம். ஆனாலும், புதிய கட்சியிடம் தோற்றுள்ளோம்.
கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என எதிர்பார்க்கப்பட்ட, சென்னை மாநகர், புறநகர், மதுரை, துாத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தோற்றது ஆச்சரியமாக உள்ளது.
இளைஞர்கள், பெண்கள் உண்மையிலேயே, விஜய் மீதான ஈர்ப்பால் ஓட்டளித்தனரா அல்லது வேறு காரணங்கள் உள்ளதா, இளம் தலைமுறையின் நம்பிக்கையை பெற, எங்கே தவறி விட்டோம், வெற்றியை எப்படி நழுவ விட்டோம் என்பதற்கான உண்மையான காரணங்களை கண்டறிய வேண்டும்.
தொகுதி வாரியாக, கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் இளைஞர்களிடம், மனம் விட்டு பேச வேண்டும் என, ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.
முன்னாள் முதல்வர் அவர்களே ஒரே ஒரு காரணம் தான்... நீங்கள் ஆட்சியிலிருந்துதான் ஆட்சி பறிபோனதற்கு ஒரே காரணம்...நீங்க ஆட்சியில் இல்லாமல் இருந்திருந்தால் ஆட்சி பறிபோய் இருக்காது
ஸ்டாலின் அவர்களே கீழ்கண்ட காரணங்களை பற்றி ஆராய வேண்டும் ரெட் ஜெயண்ட் மூலம் அதிகாரத்தை பயன்படுத்தல் , சபரீசனின் ஆட்டம், அரசியலில் சபரீசன் தலையீடு, அனுபவம் மிக்க வயதான அமைச்சைச்சர்கள் பணத்தினால் வெல்லலாம் என்று தப்பான கணக்கு, டீ ஆர் பாலு, துரைமுருகன், பெரியசாமி, அதிகாரத்தை குறைக்காமல் விட்டது, வைகோ மற்றும் பிரேமலதா வை கூட்டணியில் சேர்த்தது, சுதீஷ் யை எம் பி ஆகியது, பணம் இருந்தால் என்ன வேனுமாலும் செய்யலாம். எம் பி ஸீட் வாங்கலாம் என்ற போக்கினை கடைப்பிடைத்தது , இளைஞர்களை முக்கியத்துவம் இல்லாமல் செய்தது, பணம் இல்லையென்றால் தி மு காவில் மரியாதை இல்லை என்ற எண்ணத்தை உண்டாக்கியது. போதை கலாச்சாரத்தை குறைக்காமல் விட்டது, கவுன்சிலர்கள் அட்ராசிட்டி காலம் மாறிவிட்டது தாமும் மாற வேண்டும் -
பாவம் பொம்மை. ரஜினி ஏதோ மரியாதைக்கு நண்பர் அப்டின்னு சொன்னா இது ஏதோ தான் தான் சூப்பர் ஸ்டார் அப்டின்னு நினைத்து கதம் கதம் என கையை ஆட்டியது. அந்த கை இவர்களை கழுவி விட்டு அமைச்சர்களாக பதவி ஏற்க இருக்கிறார்கள். கடைசி யில் கதம் டீய மூ கா தான். நல்ல காமெடி. இவரு தான் பெரிய அப்பாதக்கர் ஆச்சா சிபி சக்கரவர்த்தி மாதிரி இரும்புக் கரம் கொண்டு தனது மகனை தோல்விக்கு நடவடிக்கை எடுத்து தமிழர் என நிரூபிக்க வேண்டும்.
விரும்பத்தகாத கரூர் மரணம்
சேகர் பாபு மக்களிடையே ஒரு வித வெறுப்பு
தங்களது பிள்ளை மக்களிடையே தங்களை போல இல்லாமல் நெருக்கம் குறைவு
பழனிவேல், தென்னரசு போன்ற சன்றோர் மந்திரி சபையில் இல்லை
டெண்டர், காண்ட்ராக்ட் கையாளுதல்.
உங்களது ஆட்சியில் ஒருவிதமான பயம் மக்களிடையே அதிகார ஆணவத்தால் தேவையில்லாமல் உண்டாக்க பட்டது.
தங்கள் ஆட்சியில் டெவெலப்மென்ட் பரவாயில்லை
செமி கண்டக்டர் கம்பெனி வந்தது.
மோடிஜி யுடன். இணக்கமாக இருந்திருக்கலாம்.தமிழகம் மேலும் முன்னேறியிருக்கும்
பாரளுமன்றத்தில் தேவையில்லாமல் காங்கிரெஸ்க்காக அமலி. கட்சியின் தேவையை அவர்கள் அறிந்து இப்போது சென்று விட்டனர். . நீங்கள் தமிழகம் தேவையை உணரவில்லை. ஏமாளியாக நிற்கிறீர்கள். ப ஜ க இதை செய்யாது
மதத்தில் கைவைப்பது எப்பவும் அரசியல் கட்சிகளுக்கு ஆபத்து
தேர்தலில் ப ஜ கவை தாக்கினீர்கள். உங்கள் எதிரி யார் என்று நீங்கள் அறிய வில்லை,
மோடி போன்று சாதரண குடியில் பிறந்தவர்களது நட்பு எல்லாவற்று க்கும் நல்லது.
ஆட்சிக்கு வந்ததும் மக்கள் வரிப்பணத்தில் எதற்கெடுத்தாலும் குழு அமைத்தீரே. ஞாபகம் இருக்கிறதா? அந்த குழுக்கள் என்ன செய்தனவோ அதைத் தான் இந்த குழுவும் செய்யும்.
kelviyin nayakane inta kelvikku bathil yethu
தோல்விக்கு காரணமே நீங்கள் தான்
தினமலர் இந்த செய்தி கருத்துக்கள் அனைத்தையும் நம்ம ஸ்டாலின் கைல கொடுத்தால் போதும். 36 பேரும் கரெக்ட்டா சொல்லுவாங்களான்னு தெரியாது.
சவுக்கு சங்கர் வீட்டில் மலஜலத்தை ஊற்றி ஒரு வயதான பெண்மணி என் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டது அவர் அவருடைய சாபம் பொய் வழக்கால் ஜெயில் சித்திரவதை அனுபவித்த குடும்பங்களின் சாபம் உங்கள் போஸ்டரை அவமதித்ததற்காக கிழவியை தேடி பிடித்து ஜெயிலில் தள்ளியது அந்த கிழவியின் சாபம் நெற்றியில் இட்ட திருநீரை அழித்து கடவுளை அவமதித்ததற்கான சாபம் ஒருவேளை சோற்றுக்கே வழியில்லாமல் பல பேர் பட்டினி கிடக்கையில் உங்கள் குடும்பத்தினர் 15 கோடி ரூபாயில் கைக்கடிகாரம் அதனால் மக்களுக்கு உண்டான கோபம் எரிச்சல் கவர்னரை போஸ்ட்மேன் என்று அவமதித்தது பாரதப் பிரதமரையே மதிக்காது தமிழ்நாடு டெல்லிக்கு தலைவணங்குது என்று ஆணவமாக பேசியது....... அப்பப்பா வாய் வலிக்குது பா லிஸ்ட் நீண்டு ண்டு கொண்டே போகிறது
உண்மையான காரணமா இதை படியுங்கள். லட்சம் கோடிகள் ஊழல் தமிழ்நாட்டை சூறையாடி வெளிநாடுகளில் முதலீடு சினிமா துறையை ஆக்கிரமித்துக் கொண்டு மற்றவர்களை வாழ விடாமல் அடாவடி செய்தது அரசை விமர்சனம் செய்தால் பொய் வழக்குகள் போட்டு சித்திரவதை செய்தது தினமும் கற்பழிப்பு சம்பவங்கள் கொலைகள் கொள்ளைகள் போதை மருந்துகள் தாராளமாக கிடைக்கச் செய்து போதை ஆசாமிகளை உருவாக்கியதுஇந்து மதத்தை கேவலப்படுத்தி பேசியது உதயநிதியின் ஆணவப் போக்கு அடாடவடித்தனம் அராஜகம் யாரையோ திருப்தி படுத்த சென்னை நகரத்துக்குள் போக்குவரத்து நிறைந்த சாலையில் கார் பந்தயம் நடத்தியது குடிமகன்களில் வயிற்றில் அடித்து பத்து ரூபாய் இருபது ரூபாய் அதிகமாக வசூல் செய்தது சொத்து வரியை பல மடங்கு உயர்த்தியது மின்சார கட்டணத்தை உயர்த்தி நடுத்தர மக்களை இன்னல்களுக்கு ஆளாக்கியது இன்னும் எவ்வளவோ உள்ளன நீங்களே அலசி ஆராய்ந்து பாருங்கள்.