ஆமையாக ஊர்ந்த வாகனங்கள்; சுற்றுலா பயணியர் அவதி
சேலம்: கோடை விடுமுறை முடியும் நிலையில் உள்ளதால், சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேற்று காலை முதலே, ஏராளமான சுற்-றுலா பயணியர் குவிந்தனர். சேலம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்-றுலா பயணியர், குடும்பத்தினருடன் குவிந்தனர். ஆனால் ஒரே நேரத்தில் ஏராளமான இருசக்கர வாகனங்கள், கார்கள், சுற்றுலா வாகனங்கள், மலைப்பாதையில் ஏறியதால் அடிவாரத்தில் இருந்தே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குறிப்பாக குறுகலான கொண்டை ஊசி வளைவுகளில் வாக-னங்கள் திரும்ப முடியாமல் திணறின. மலைப்பாதையில் பல கி.மீ.,க்கு, கார்கள் நீண்ட வரிசையில் அணிவ-குத்து நின்றன. நெரிசலால் வாகனங்கள், ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றதால் சுற்றுலா பயணியர் அவதிக்குள்ளாகினர். ஒரு வழியாக ஏற்காடு சென்ற சுற்றுலா பயணியர், அங்குள்ள படகு இல்லத்தில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சூழல் சுற்-றுலா, அண்ணா, ஏரி, தாவர
வியல் பூங்காக்கள், ரோஜா தோட்டம், ஜென்ஸ் சீட், பக்கோடா பாயின்ட், சேர்வராயன் கோவில் உள்ளிட்ட இடங்களை கண்டுக-ளித்தனர்.
இதனால் ஏற்காடு பிரதான சாலைகளிலும் போக்கு
வரத்து நெரிசல் காணப்பட்டது. போலீசார் முக்கிய சந்திப்புகள், மலைப்பாதை வளைவுகளில் நின்று, போக்குவரத்தை சரி-செய்யும் பணியில்
ஈடுபட்டனர்.
மேலும்
-
கும்மிடிப்பூண்டியில் வீட்டு மனை பட்டா கேட்டு வருவாய் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
-
மகளிர் கால்பந்து லீக் போட்டி: புழல் எப்.சி., அபார வெற்றி
-
காஞ்சியில் கங்கையம்மனுக்கு கோடை உத்சவம் விமரிசை
-
மின் விளக்குகள் பழுதானதால் மறைமலை நகர் மக்கள் அவதி
-
படப்பை இரட்டை கொலை வழக்கு 2 சிறுவர்கள் உட்பட 7 பேர் சிக்கினர்
-
திருப்போரூரில் கூட்டு குடிநீர் திட்ட பணிகள்: கலெக்டர் ஆய்வு