மகளிர் கால்பந்து லீக் போட்டி: புழல் எப்.சி., அபார வெற்றி
சென்னை: மகளிர் கால்பந்து லீக் போட்டியில், புழல் எப்.சி., அணி வெற்றி பெற்றது.
சென்னை கால்பந்து சங்கம் சார்பில், சென்னை மண்டல அளவில் மகளிருக்கான கால்பந்து லீக் போட்டி, சென்னையின் பல்வேறு மைதானங்களில் நடக்கிறது.
அந்த வகையில், நேற்று பேசின்பிரிட்ஜில் பகுதியில் நடந்த போட்டியில், புழல் எப்.சி., அணி, பெகாசஸ் எப்.சி., அணியை எதிர்த்து மோதியது. இதில் அசத்திய புழல் எப்.சி., அணி 3 - 0 என்ற கோல் கணக்கில், அபார வெற்றியை பதிவு செய்தது.
அடுத்த போட்டியில் ப்யூல் எப்.சி., அணி, ரைட் டிராக் எப்.சி., அணியை எதிர்த்து மோதியது. இதில் ப்யூல் எப்.சி., அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றியை பதிவு செய்தது.
தொடர்ந்து தாலந்த் எப்.சி., அணி, பி.பி.சி., - எப்.சி அணியை எதிர்த்து போட்டியிட்டது. இதில் அசத்திய தாலந்த் எப்.சி., அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றியை பதிவு செய்தது.
மேலும்
-
'போர்வாள்' நாளிதழ் துவங்கினார் இபிஎஸ்!
-
வெளிநாடுகளில் இந்தியாவின் கவுரவத்தை உறுதி செய்யும் மோடி: சரத் பவார் பாராட்டு
-
மெலோனிக்கு 'மெலோடி'யை பரிசளித்த பிரதமர் மோடி; வைரலாகும் கலகலப்பு வீடியோ
-
அதிமுக எம்எல்ஏக்கள் அமைச்சரவையில் இடம்பெறமாட்டார்கள்; திருமா தகவல்
-
புதிய வாகனத்தை இயக்கிப் பார்த்து முதல்வர் விஜய் ஆய்வு
-
அமைச்சரவையில் இடம்; விசிக, முஸ்லிம் லீக்கிற்கு தவெக அழைப்பு