காஞ்சியில் கங்கையம்மனுக்கு கோடை உத்சவம் விமரிசை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் கங்கையம்மனுக்கு கோடை உத்சவம் விமரிசையாக நடந்தது.
காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் அருகில் உள்ள கங்கையம்மனுக்கு ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் கோடை உத்சவம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி நடப்பு ஆண்டுக்கான உத்சவம் (மே 19) விமரிசையாக நடந்தது இதில், மதியம் 12:00 மணிக்கு அம்மனுக்கு கூழ்வார்த்தல் நடந்தது.
தொடர்ந்து கங்கையம்மன் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார், மாலை 6:00 மணிக்கு நாதஸ்வரம் நிகழ்ச்சியை தொடர்ந்து அம்மனுக்கு கும்பம் படையலிடப்பட்டது
இரவு 9:00 மணிக்கு சிறுவஞ்சிப்பட்டு ரேணுகாம்பாள் நாடக மன்றத்தினர் தெருகூத்து நாடகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
59 ஆண்டுகளுக்கு பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரசுக்கு இடம்; வெளியானது அமைச்சர்களின் விவரம்
-
கேரள முதல்வரின் செயலாளராக மதுரை ஐ.ஏ.எஸ்., அதிகாரி
-
கார் மோதி முதியவர் பலி
-
தினமலர் செய்தி எதிரொலி லோகோ வைக்கவும்.. சீரமைக்கப்பட்டது சுங்கச்சாவடி வசூலிப்பு அறை
-
குழாய் உடைந்து ரோட்டில் வீணாகும் குடிநீர்
-
வைகாசி பொங்கல் கொடியேற்றம்
Advertisement
Advertisement