நகராட்சி கட்டண கழிப்பிட நுழைவில் கேமராக்கள் இயற்கை உபாதைக்கு செல்லும் பெண்கள் அச்சம்

ஆத்துார்: ஆத்துார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள, நகராட்சிக்கு சொந்த-மான, 3 கட்டண கழிப்பிட நுழைவு பகுதிகளில், 'சிசிடிவி' கேமரா வைத்துள்ளதால் இயற்கை உபாதைக்கு செல்லும் பெண்கள் அச்சப்படுகின்றனர்.


சேலம் மாவட்டம் ஆத்துார் பழைய, புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதி-களில், 3 இடங்களில் நகராட்சிக்கு சொந்தமான கட்டண கழிப்பி-டங்கள் உள்ளன. அவற்றை, ஒப்பந்ததாரர் ராஜேந்திரன், ஒப்-பந்தம் எடுத்து நடத்துகிறார். 3 கழிப்பிடங்களிலும், ஆண், பெண் என, தனித்
தனியே பாதை உள்ளது. ஆனால் அதன் நுழைவு பகுதிகளில், 3 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இவற்றில் பதிவாகும் வீடியோ காட்சிகளை, பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள வணிக வளாக கடையில் இருந்து, ஒப்பந்த-தாரர் கண்காணிக்கிறார். கேமரா இருப்பதை பார்க்கும் பெண்கள் உள்ளிட்டோர் அச்சப்படுகின்றனர். தவிர சிறுநீர் கழிக்க, 5 ரூபாய்; கழிப்பிடத்துக்கு, 10; குளிக்க, 15 ரூபாய் கட்டணம் நிர்-ணயிக்கப்பட்டுள்ள நிலையில், சிறுநீர், கழிப்பிடத்துக்கு தலா, 10 ரூபாயும், சில நேரங்களில், 15 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இதற்கு வினியோகிக்கும் ரசீதுகளில், 2021 - 24 என ஆண்டு குறிப்பிட்டு, கட்டண விபரங்கள் திருத்தப்பட்ட நிலையில் உள்-ளது. அந்த பழைய ரசீதுகளில், நகராட்சி அலுவலக, 'சீல்' உள்-ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, 2014ல், இதே போன்று நகராட்சி கட்டண கழிப்ப-றையை ஒப்பந்தம் எடுத்த ராஜேந்திரன், கேமரா பொருத்தியதால், பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போதைய நகராட்சி கமிஷனர் ஜெகதீஸ்வரி, கேமராக்களை அகற்றி, மீண்டும் இச்செயலில் ஈடுபட்டால் ஒப்பந்த உரிமம் ரத்து செய்-யப்படும் என, ஒப்பந்ததாரரை எச்சரித்தார். 12 ஆண்டுகளுக்கு பின், கட்டண கழிப்பிடங்களில், நகராட்சி நிர்வாக அனுமதி-யின்றி கேமரா பொருத்தி, பழைய ரசீதுகள் வழங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து ராஜேந்திரன் கூறுகையில், ''கட்டண கழிப்பிடங்-களில், 'கல்லா' பெட்டியை நோக்கி தான், பாதை முன் கேமரா பொருத்தியுள்ளேன். தவறான எண்ணம் இல்லை. பழைய ரசீ-துகள் இருந்ததால் பயன்படுத்தினேன். இனி புது ரசீதுகள் வழங்-கப்படும்,'' என்றார்.
ஆத்துார் நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன்(பொ) கூறுகையில், ''கழிப்பிட பகுதியில் கேமரா வைக்க அனுமதி வழங்கவில்லை. ஆய்வு செய்து ஒப்பந்ததாரரிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும். புது ரசீது வழங்க அறிவுறுத்தப்படும்,'' என்றார்.

Advertisement