பர்கூர் பஸ் ஸ்டாண்ட் டேங்க்கில் குடிநீர் இல்லாமல் பயணியர் தவிப்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் டவுன் பஞ்.,ல், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையம், அரசு பொறியியல் கல்லுாரி, அரசு மருத்துவமனை, பி.டி.ஓ., அலுவலகம், தாசில்தார் அலுவ-லகம் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், 2000க்கும் மேற்-பட்ட ஜவுளிக்கடைகள், 200க்கும் மேற்பட்ட கிரானைட் தொழிற்-சாலைகள் மற்றும் கிரானைட் கடைகள் உள்ளன.
பர்கூருக்கு ஆந்திர மாநிலம் குப்பம், சித்துார், கர்நாடக மாநிலம் பெங்களூரு, கிருஷ்ணகிரி, திருப்பத்துார் மாவட்டத்திற்கு உட்-பட்ட பகுதிகளில் இருந்தும் தினசரி, 5,000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் பஸ்களில் பயணிக்கின்றனர். ஆயிரக்கணக்கான பேர் வந்து செல்லும் பர்கூர் பஸ் ஸ்டாண்டில், போதிய வசதிகள் இல்லை. கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், முதியவர்கள், குழந்தைகள் ஓய்-வெடுக்கவோ, உட்காரும் வசதிகளோ கூட முறையாக இல்லை.மேலும் பல மாதங்களாக பஸ் ஸ்டாண்டில் வைத்திருக்கும் குடிநீர் தொட்டியில் தண்ணீர் விடுவதில்லை. இதனால் பயணிகள் மிகவும் அவதிக்கு ஆளாகின்றனர். குடிநீர் பாட்டில்கள் அரை லிட்டர் பாட்டில், பத்து ரூபாய் எனவும் ஒரு லிட்டர், 20 ரூபாய் எனவும் விற்கப்படுகிறது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வரும் பெண்கள், பஸ்சில் இலவசமாக பயணித்தாலும், குடிநீ-ருக்கு, 20 ரூபாய் செலவு செய்ய வேண்டி உள்ளது என புலம்பு-கின்றனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, பர்கூர் பஸ் ஸ்டாண்டி-லுள்ள குடிநீர் டேங்க்குகளில், தண்ணீரையாவது முதலில் நிரப்ப கோரிக்கை விடுத்துள்ளனர்.