காதல் ஜோடி தஞ்சம்

சேந்தமங்கலம் :சேந்தமங்கலம் டவுன் பஞ்.,க்கு உட்பட்ட காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வ பாரதி, 24; பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரும், நாமக்கல் மாவட்டம், திருச்சி ரோடு பகுதியை சேர்ந்த ஸ்ரீமதி, 25, என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும், திருப்பூர் கருப்பராயன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.


பின், சேந்தமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். எஸ்.ஐ., சந்தியா, இருவரது பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இறுதியில், ஸ்ரீமதியை கணவர் செல்வ பாரதியுடன் அனுப்பி வைத்தனர்.

Advertisement