22 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
விழுப்புரம்: விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த 22 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்ட போலீஸ் பணியிடை பயிற்சி மைய இன்ஸ்பெக்டர் ராதிகா, செஞ்சி மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கும், இவருக்கு பதிலாக கள்ளக்குறிச்சி மாவட்ட குற்றப்பதிவு ஆவண மையத்தில் பணியாற்றிய தேவியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
செஞ்சி மகளிர் இன்ஸ்பெக்டர் விஜி, விழுப்புரம் மகளிர் ஸ்டேஷனுக்கும், விழுப்புரம் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சுமதி உளுந்துார்பேட்டை மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கும், இங்குள்ள இன்ஸ்பெக்டர் சரஸ்வதி விழுப்புரம் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வரஞ்சரம் இன்ஸ்பெக்டர் மரியசோபி மஞ்சுளா- விழுப்புரம் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு பிரிவுக்கும் மாற்றம் செய்யப்பட்டார்.
விழுப்புரம் மகளிர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் தாரனேஸ்வரி பெரியதச்சூர் ஸ்டேஷனுக்கும், இங்குள்ள இன்ஸ்பெக்டர் நாகராஜன் எலவனாசூர்கோட்டைக்கும், எலவனாசூர்கோட்டை இன்ஸ்பெக்டர் ஆனந்தன், உளுந்துார்பேட்டைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
உளுந்துார்பேட்டை இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் காடாம்புலியூருக்கும், இங்குள்ள இன்ஸ்பெக்டர் ஷாகுல்அமீது, கள்ளக்குறிச்சி குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு பிரிவு சேகர், வானுார் இன்ஸ்பெக்டர் தீபா, கோட்டக்குப்பம் மதுவிலக்குப் பிரிவு கலையரசி, முத்தாண்டிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மதுவிலக்குப் பிரிவு இன்ஸ்பெக்டர் கோமதி விழுப்புரம் மதுவிலக்குப் பிரிவுக்கும், இங்குள்ள இன்ஸ்பெக்டர் ஆனந்தி கள்ளக்குறிச்சி குழந்தைகள் பாதுகாப்பு பிரிவுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சக்தி, வானுார் ஸ்டேஷனுக்கும், திண்டிவனம் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் வரஞ்சரம் மற்றும் கள்ளக்குறிச்சி தனிப்பிரிவு (பொறுப்பு) இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரம்மதேசம் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் திண்டிவனம் ஸ்டேஷனுக்கும், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் கோட்டக்குப்பம் மதுவிலக்கு பிரிவுக்கும், கடலுார் மாவட்டம், சிதம்பரம் மதுவிலக்குப் பிரிவு தர்மலிங்கம் முத்தாண்டிக்குப்பம் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.