கணவரை தாக்கியதை கண்டித்து கை குழந்தையுடன் பெண் மறியல் அரசு மருத்துவமனையில் பரபரப்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் வெளி நபர்களை வரவழைத்து கணவரை தாக்கிய பெண் செக்யூரிட்டி உள்ளிட்டவர்களை கைது செய்யக்கோரி, கைக்குழந்தையுடன் பெண் சாலை மறியலில் ஈடுபட்டார்.
கள்ளக்குறிச்சி அடுத்த உலகங்காத்தான் கிராமத்தை சேர்ந்தவர் பிரசாத், 32; இவரது மனைவி எழிலரசி, 25; இவருக்கு கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனை பிரிவில் கடந்த 6 நாட்களுக்கு முன் குழந்தை பிறந்தது. தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை 2:00 மணியளவில் எழிலரசி, பிரசாத் ஆகியோர் மதிய உணவு சாப்பிடுவதற்கு அங்கேயே கையை கழுவியதாக கூறப்படுகிறது. அப்போது தனியார் செக்யூரிட்டி நிறுவன பெண் ஊழியர் சிறுவங்கூரை சேர்ந்த முனியன் மனைவி மாரியம்மாள், அவர்களை கண்டித்துள்ளார்.
இதனால் பிரசாத்திற்கும், மாரியம்மாளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பெண் செக்யூரிட்டி மாரியம்மாள், அவரது மகன் பாலா, 23; மற்றும் அவருடன் பணிபுரியும் ஊழியர்கள் சேர்ந்துபிரசாத்தை தாக்கினர்.
தாக்குதலில் படுகாயமடைந்த பிரசாத் சிறுவங்கூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதனையறிந்த பிரசாத்தின் உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். கணவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, எழிலரசி, கைக்குழந்தை மற்றும் உறவினர்களுடன் மருத்துவமனை முன் கள்ளக்குறிச்சி - கச்சிராயபாளையம் சாலையில் 5:00 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டார்.
தகவலறிந்த இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார், விநாயகமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் வெளி நபர்களை வரவழைத்து தாக்குதலில் ஈடுபட்ட தனியார் செக்யூரிட்டி பெண் ஊழியர் மற்றும் அவரது மகன் உள்ளிட்டோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
நடவடிக்கை எடுக்கப்படும் போலீசார் கூறியதின் பேரில் மாலை 5:45 மணியளவில் மறியலை கைவிட்டனர்.
மேலும்
-
'போர்வாள்' நாளிதழ் துவங்கினார் இபிஎஸ்!
-
வெளிநாடுகளில் இந்தியாவின் கவுரவத்தை உறுதி செய்யும் மோடி: சரத் பவார் பாராட்டு
-
மெலோனிக்கு 'மெலோடி'யை பரிசளித்த பிரதமர் மோடி; வைரலாகும் கலகலப்பு வீடியோ
-
அதிமுக எம்எல்ஏக்கள் அமைச்சரவையில் இடம்பெறமாட்டார்கள்; திருமா தகவல்
-
புதிய வாகனத்தை இயக்கிப் பார்த்து முதல்வர் விஜய் ஆய்வு
-
அமைச்சரவையில் இடம்; விசிக, முஸ்லிம் லீக்கிற்கு தவெக அழைப்பு