10 டாஸ்மாக் கடைகள் மூடல்
நாமக்கல் தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள் அருகே உள்ள, 276 டாஸ்மாக் கடைகள், கல்வி நிலையங்கள் அருகே, 186, பஸ் ஸ்டாண்ட் அருகே, 255 என, மொத்தம், 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில், 169 டாஸ்மாக் கடைகள் உள்ளன. அவற்றில், தமிழக முதல்வர் விஜய் உத்தரவுப்படி, வழிபாட்டு தலங்கள், பஸ் ஸ்டாண்ட், கல்வி நிறுவனங்களுக்கு, 500 மீ.,க்குள் இருக்கும் டாஸ்மாக் கடைகளை, இரண்டு வாரத்திற்குள் மூடவேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கடந்த, 13ல், நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்டில், 2 கடைகள், ராசிபுரம் பஸ் ஸ்டாண்டில், ஒன்று, மோகனுார் நாவலடியான் கோவில் அருகில் ஒன்று, குமாரபாளையம் தாலுகா, அருவங்காடு சர்ச் அருகில் ஒன்று, என மொத்தம், ஐந்து டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, குமாரபாளையத்தில், சேலம் மெயின் சாலை, இடைப்பாடி மெயின் சாலை, ஜே.கே.கே., தெரு, பள்ளிப்பாளையம் சாலை ஆகிய, நான்கு டாஸ்மாக் கடைகளும், திருச்செங்கோட்டில், ஒன்று என, மொத்தம், ஐந்து டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில், இதுவரை, பத்து டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. அதனால், மாவட்டத்தின் மொத்த கடைகளின் எண்ணிக்கை, 159 ஆக குறைந்துள்ளது.
மேலும்
-
ஈரானுக்கு எதிரான போரில் 42 விமானங்களை இழந்தது அமெரிக்கா
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு; வெள்ளி கிலோவுக்கு ரூ.15 ஆயிரம் சரிவு
-
ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றும் திட்டம் ஏதுமில்லை; சொல்கிறது நேட்டோ
-
10ம் வகுப்பு ரிசல்ட் வெளியானது; 94.31 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி
-
சவுமியா சுவாமிநாதனுக்கு லண்டன் ராயல் சொசைட்டியின் கவுரவம்
-
'சாட்ஜிபிடி'(ChatGPT)-யில் சத்குருவின் “மிராக்கிள் ஆஃப் மைண்ட்” தியான செயலி!