'உதயநிதிக்கு நல்ல புத்தி கொடு': தோப்புக்கரணம் போட்டு பிரார்த்தனை

85

கோவை: சமீபத்தில் சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, 'சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்' என்று கூறினார். இதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தன.

இந்நிலையில், உதயநிதிக்கு நல்ல புத்தி வழங்க வேண்டி, கோவை புலியகுளம் பகுதியில் உள்ள முந்தி விநாயகர் கோவிலில், ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தோப்புக்கரணம் போட்டு பிரார்த்தனை செய்தார்.

பின் அர்ஜுன் சம்பத் அளித்த பேட்டி:

சங்க தமிழர்கள் சனாதன ஹிந்து தர்மத்தை பின்பற்றினர். சனாதனம் ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது.

ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பது சனாதனம். அந்த கொள்கையை ஏற்றவர் அண்ணாதுரை. துர்கா ஸ்டாலினே சனாதன கொள்கையை தான் பின்பற்றுகிறார்.

உதயநிதி, ஹிந்து தர்மத்தை விமர்சித்து வருகிறார். அனைத்து மதங்களுக்கும் பொதுவானவர் என காட்டிக்கொள்ளும் முதல்வர் விஜய், இதை கண்டித்திருக்க வேண்டும்.

தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ் கட்சிகளின் நிர்வாகிகளும் சனாதன தர்மத்தை ஒழிப்பேன் என்கின்றனர்.

அவர்கள் வன்மத்துடன் செயல்படுகின்றனர். அதற்கு விஜய் பலியாகி விடக்கூடாது. இதை தமிழ் மண் மன்னிக்காது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement