எஸ்.புதுாரில் மஞ்சுவிரட்டு
எஸ்.புதூர், மே 18-–
எஸ்.புதூர் அருகே வா.கட்டையம்பட்டியில் மஞ்சுவிரட்டு நடந்தது.
இங்குள்ள முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதலை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. அங்குள்ள பெரிய கண்மாயில் தொழு அமைக்கப்பட்டு முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதை தொடர்ந்து மற்ற மாடுகள் ஒவ்வொன்றாய் அவிழ்க்கப்பட்டன. ஏராளமான வீரர்கள் மாடுகளை பிடிக்க முயன்றனர். ஒரு சில மாடுகள் மட்டும் பிடிபட்ட நிலையில், பல மாடுகள் வெளியேறின. அனைத்து மாடுகளுக்கும் கிராமத்தினர் சார்பில் துண்டு வழங்கப்பட்டது. மஞ்சுவிரட்டில் மாடுகள் முட்டியதில் 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
//
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோவிந்தசாமி சிலைக்கு எம்.எல்.ஏ., மாலை அணிவிப்பு
-
பெண்ணிடம் செயின் பறிப்பு போலீஸ் தீவிர விசாரணை
-
சால்வை வேண்டாம், எலுமிச்சம் பழம் போதும் நிர்வாகிகளுக்கு வசந்தம் ‘அட்வைஸ்’
-
போத்துவாய் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
-
ஆத்தங்கரைப்பட்டி ஊராட்சியில் உப்பு நீரால் கல் அடைப்பு பாதிப்பு கண்டு கொள்ளாத அதிகாரிகளால் பொதுமக்கள் அவதி
-
சூரியன் ஒருபோதும் மறையாது... மறுபடியும் உதிக்கும்; சொல்கிறார் உதயநிதி
Advertisement
Advertisement