மாணவியை கொல்ல முயன்ற வாலிபர்: திருச்சியில் அதிர்ச்சி
-நமது நிருபர்-
காதலை கைவிட்ட மாணவியை திருச்சியில் வாலிபர் கல்லால் அடித்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் சாலைகிராமத்தைச் சேர்ந்தவர் வியாகுல நவீன், 22. திருச்சி கல்லூரியில் உடன்படித்த 22 வயது மாணவியை காதலித்தார். மாணவியின் பெற்றோர் திருமணத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் மாணவியும் காதலை கைவிட்டு விட்டார்.
ஆத்திரமடைந்த வாலிபர் இன்று ஈவிஆர் கல்லூரி அருகே உள்ள ரேஸ்கோர்ஸ் சாலையில் மாணவியை தாக்கி கல்லால் அடித்து கொலை செய்ய முயற்சித்தார்.
கல்லால் மாணவியின் முகத்தை சிதைக்க முயன்ற அவரது செயலைக் கண்டு அங்கிருந்தவர்கள் அலறி கூச்சல் போட்டனர். சம்பந்தப்பட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோவிந்தசாமி சிலைக்கு எம்.எல்.ஏ., மாலை அணிவிப்பு
-
பெண்ணிடம் செயின் பறிப்பு போலீஸ் தீவிர விசாரணை
-
சால்வை வேண்டாம், எலுமிச்சம் பழம் போதும் நிர்வாகிகளுக்கு வசந்தம் ‘அட்வைஸ்’
-
போத்துவாய் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
-
ஆத்தங்கரைப்பட்டி ஊராட்சியில் உப்பு நீரால் கல் அடைப்பு பாதிப்பு கண்டு கொள்ளாத அதிகாரிகளால் பொதுமக்கள் அவதி
-
சூரியன் ஒருபோதும் மறையாது... மறுபடியும் உதிக்கும்; சொல்கிறார் உதயநிதி
Advertisement
Advertisement