சனாதனம் குறித்து தவறாக பேசிய உதயநிதி பதவியை பறிக்க வேண்டும்;ஹிந்து முன்னணி வலியுறுத்தல்

13


திருப்பூர்: 'எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியின் பதவியை பறிக்க வேண்டும்' என ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, சட்டசபையில், 'சனாதன தர்மத்தை ஒழிப்பது தான் எங்கள் நோக்கம்' என்று பேசினார். அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, ஹிந்து முன்னணி சார்பில் திருப்பூரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமை வகித்தார்.

அவர் பேசுகையில், ''ஹிந்து மதம் குறித்து அவதுாறாக பேசிய வழக்கில் உதயநிதி, முன்ஜாமின் பெற்றுள்ளார். ஏற்கனவே இதுபோல் பேசியதால் தான், அவர்களை மக்கள் தோற்கடித்து, ஓரத்தில் அமர வைத்துள்ளனர். எம்.எல்.ஏ.,வாக, அரசு பதவியில் உள்ள உதயநிதி, இதுபோல் பேசுவது வரம்பு மீறிய செயல். அவரது எம்.எல்.ஏ., பதவி பறிக்கப்பட வேண்டும்,'' என்றார்.

Advertisement