டூவீலர்கள் திருட்டு
தேனி: பழைய டி.வி.எஸ்.,ரோடு காமராஜர் லைன் ஜாவித் அக்தர் 25, சட்டக்கல்லுாரி மாணவர். இவரது நண்பர் கொண்டுராஜா லைன் சுல்தான் இப்ராஹிம். இவர்களது டூவீலரை ஜாவித் அக்தர் வீட்டருகே நிறுத்தியிருந்தனர். இந்நிலையில் இருவது டூவீலரும் திருடு போனது. ஜாவித் அக்தர் புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.
மதுபோதையில் தகராறு
தேனி: பொம்மையன்கவுன்டன்பட்டி தீர்த்தக்கரை 38. இவர் அதே பகுதியில் உள்ள மதுக்கடைக்கு பொன்முருகன் என்பவருடன் சென்றார். இருவரும் மதுகுடித்துவிட்டு பெரியகுளம் ரோட்டில் தகராறில் ஈடுபட்டனர். பொன்முருகன் தாக்கியதில் தீர்த்தக்கரை காயமடைந்தார். இவரது புகாரில் அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
முதியவர் காயம்
தேனி: பழனிசெட்டிபட்டி தியாகராஜன் 70. இவர் பழனிசெட்டிபட்டியில் தேனி-கம்பம் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது சிலைமலையை சேர்ந்த சிவக்குமார் கம்பத்தில் இருந்து தேனிக்கு அரசு பஸ்சை ஓட்டி வந்தார். அந்த பஸ் ரோட்டை கடந்த தியாகராஜன் மீது மோதியது. விபத்தில் காயமடைந்த தியாகராஜன் தேனி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவரது மகன் வினோத்கண்ணன் புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
சிறுமி மாயம்
தேனி: பழனிசெட்டிபட்டி ராஜாஜி நகர் கமலா 41. இவரது மகள் 17 வயது சிறுமி. வீட்டில் இருந்து மாயமானார். தெரிந்த இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. கமலா புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
மதுவிற்றவர் கைது
தேனி: தேனியில் நகராட்சி மின்மயானம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த ராமேஸ்வரம் லட்சுமி பிரசாத் 22, என்பவரை விசாரித்தனர். அவர் சட்டவிரோதமாக மதுவிற்றது தெரிந்தது. அவரிடம் 13 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அவரை தேனி போலீசார் கைது செய்தனர்.
மேலும்
-
ஊட்டியில் துவங்கியது மலர் கண்காட்சி
-
பயணிகளுடன் சென்ற ரயிலில் திடீரென பற்றியது தீ; பீஹாரில் அதிர்ச்சி
-
அமெரிக்காவில் வான் சாகச நிகழ்வில் இரு போர் விமானங்கள் மோதி விபத்து
-
இருந்த அடையாளமே இருக்காது; ஈரான் வரைபடத்தை குறிவைத்து எச்சரிக்கும் டிரம்ப்
-
விஜய் முதல்வரானதில் எனக்கு பொறாமை இல்லை: நடிகர் ரஜினி பேட்டி
-
அ.தி.மு.க.,வினருக்கு அமைச்சர் பதவி இழுபறி ஏன்?