காரைக்குடி பஸ் ஸ்டாண்டில் அமைச்சர் பிரபு ஆய்வு
காரைக்குடி: காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் அமைச்சர் பிரபு நேற்று ஆய்வு மேற்கொண்டு, கழிப்பறையை முறையாக பராமரிக்கவும், குடிநீர் வசதி ஏற்படுத்தவும் உத்தரவிட்டார்.
காரைக்குடி பஸ் ஸ்டாண்டிற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகளும், மாணவ மாணவிகளும் வந்து செல்கின்றனர். காரைக்குடி புதிய பஸ் ஸ்டாண்டில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் 2 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பாடின்றி காட்சி பொருளாக கிடக்கிறது. குடிநீர் கிடைக்காமல், பயணிகள் சிரமமப்படுகின்றனர்.
கழிப்பறைகளும் முறையான பராமரிப்பின்றி கிடக்கிறது. தொடர் புகாரால் நேற்று அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கமிஷனர் சங்கரன், மாநகர நல அலுவலர் வினோத் உடன் இருந்தனர். குடிநீர் இயந்திரங்களை முறையாக பராமரித்து குடிநீர் வழங்கிடவும், கழிப்பறைகளை பராமரித்து துாய்மையாக வைக்கவும் உத்தரவிட்டார்.
தேவகோட்டை: தேவகோட்டை ஒன்றியம் குறுந்தனக்கோட்டை ஊராட்சி பாவாசி கிராமத்திற்கு அமைச்சர் பிரபு சென்றார். குடிநீர் திட்ட அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
மதுரை - தொண்டி ரோட்டில் பாவாசி வரை 10 ஆயிரம் லிட்டர் தரை மட்ட தொட்டி மூலமும் பாவாசி கிராமத்திற்கு 30 ஆயிரம் லிட்டர் மேல்நிலை தொட்டியில் நீரேற்றி 20 நாளில் கிராமத்திற்கு தண்ணீர் வழங்குவதாக தெரிவித்தனர். கீழ உச்சாணயில் ரோடு, குடிநீர் வசதி கேட்டனர்.
காவிரி குடிநீர் குழாயில் உப்பு நீர் கலந்து வருவதாகவும் , நல்ல தண்ணீர் குடம் ஒன்றுக்கு ரூ. 15க்கு வாங்குவதாக கூறினர்.
உப்பு நீர் கலக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் மறுத்தனர். குறையை ஆய்வு செய்ய அமைச்சர் கூறினார்.
மேலும்
-
ரூ.8 லட்சம் குட்கா பறிமுதல்: மங்கலம்பேட்டையில் பரபரப்பு
-
தொடர்ந்து மிரட்டல் விடுத்ததால் கொன்றோம் ரவுடி கொலையில் கைதானவர்கள் வாக்குமூலம்
-
22 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
-
கணவரை தாக்கியதை கண்டித்து கை குழந்தையுடன் பெண் மறியல் அரசு மருத்துவமனையில் பரபரப்பு
-
இன்று இனிதாக (20.05.2026) செங்கல்பட்டு
-
பல நாட்களுக்கு பின் குடிநீர் குழாய் கசிவை சீரமைத்த அதிகாரிகள்