மம்தா கட்சியின் எதிர்காலம் என்ன?
கொல்கட்டா: சமீபத்தில் நடந்த மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்தது, மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ். முதல்வராக இருந்த மம்தா, தன் சொந்த தொகுதி யான பவானிபூரில், தற்போதைய முதல்வர் சுவேந்து அதிகாரியிடம் தோற்றார்.
மம்தாவின் சகோதரர் மகன் அபிஷேக் பானர்ஜி. இவர், திரிணமுல் கட்சியின் லோக்சபா எம்.பி.,யாக உள்ளார். கட்சியின் நடவடிக்கைகளை இவர் தான் கவனித்து வருகிறார். நடந்து முடிந்த தேர்தலில், கட்சியின் பிரசார தி ட்டத்தை இவர் தான் தயார் செய்தார். 'மம்தா என்கிற தனி நபரை மட்டுமே கட்சி சார்ந்திருக்கக் கூடாது; கட்சியின் கட்டமைப்புகள் சீராக இருந்தால் தான் வெற்றி பெற முடியும்' என்ற கருத்தில், தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டதாம். தேர்தல் வியூக நிறுவனமான, 'ஐ- - பேக்' அபிஷேக் பானர்ஜியின் இந்த கருத்திற்கேற்ப தேர்தல் திட்டங்களை த யாரித்து செயல்படுத்தியதாம்.
இதனால் தான், மூத்த அமைச்சர்கள் உட் பட பலரும் தோற்றதுடன், கட்சி பெரும் தோல்வியை சந்தித்துள்ளது என, கட்சிக்குள் புகைச்சல் ஆரம்பித்து விட்டது. இதற்கிடையே, ஏற்கனவே நிலுவையில் உள்ள பல ஊழல் வழக்குகள் வேகம் பிடிக்கும் என, தோற்றுப்போன அமைச்சர்கள் அஞ்சுகின்றனர். சி.பி.ஐ., - அமலாக்கத் துறை மேற்கு வங்கத்தின் முன்னாள் அமைச்சர்களை விசாரித்து வருகின்றன.
நிலக்கரி ஊழல் வழக்கில், அபிஷேக் பானர்ஜியையும், அவரது மனைவியையும் அமலாக்கத் துறை ஏற்கனவே விசாரித்து வருகிறது. இனிமேல், இவர்களுக்கு பிரச்னை அதிகரிக்கும் என, தலைவர்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது. தமிழகத்தில் ஸ்டாலின் தோல்விக்கு காரணம், தேர்தல் வியூக நிறுவனமான, 'பென்' அமைப்பு என, தி.மு.க.,வினர் புகார் கூறியது போல, 'திரிணமுல் தோல்விக்கும், ஐ - -பேக் மற்றும் அபிஷேக் தான் காரணம்' என்கின்றனர் அக் கட்சியின் தொண்டர்கள். கட்சியின் எதிர்காலம் என்னவாகும் என்ற கவலையில் உள்ளனராம் திரிணமுல் நிர்வாகிகள்.
@block_B@ தொடர்புக்கு : ndussh@dinamalar.inblock_B
அதற்குள் முடிவாகிவிட்டதா? இவர்கள் காணாமல் போய்விடுவார்கள் என்று. கவலை படவேண்டாம். ஒழிந்து விடுவார்கள். இனி அங்கு என்றும் தாமரை தான் மலரும்.
கட்சியே காணாமல் போகும்மேலும்
-
முதல்வர் அறையில் ரீல்ஸ் வீடியோ; மாற்றுத் திறனாளி சங்க நிர்வாகியால் சர்ச்சை
-
மங்கலதேவி கண்ணகி கோயில் முழுமையாக அழிவதற்குள் சீரமைக்கப்படுமா:ஒவ்வொரு ஆண்டும் சேதம் அதிகரிப்பால் பக்தர்கள் கவலை
-
டிரான்ஸ்பார்மர் மின் கம்பங்கள் சேதம்
-
மசினகுடி மாயார் சாலையில் உலா வரும் புலிகள்: இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை
-
வண்டல் மண் அள்ள அனுமதி: விவசாய சங்கம் வலியறுத்தல்
-
சத்தி ரோட்டில் 1.2 கி.மீ. நிலம் எடுப்பது எப்போது?