முதல்வர் அறையில் ரீல்ஸ் வீடியோ; மாற்றுத் திறனாளி சங்க நிர்வாகியால் சர்ச்சை
சென்னை: சென்னையில் முதல்வர் விஜய் அறையில் ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிடப்பட்டு இருப்பது பெரும் அதிருப்தியையும், விமர்சனங்களுக்கும் வழிவகுத்துள்ளது.
முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய்,நாள்தோறும் துறை வாரியாக ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார். மேலும் பல்வேறு சங்க நிர்வாகிகளும் தினமும் அவரை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு சங்கங்களின் கூட்டமைப்பினர் முதல்வர் விஜயை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினர்.
மாற்றுத்திறனாளிகளின் தற்போதைய நிலை, தேவைகள் குறித்து அவர்கள் முதல்வர் விஜயிடம் விரிவாக எடுத்துரைத்துக் கொண்டு இருந்தனர். இந்த சந்திப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான தமிழ்நாடு மாநில ஆலோசனைக்குழு உறுப்பினர் சுனிதா சதாசிவம், தண்டுவட பாதிப்படைந்தோர் சங்க நிறுவனர் ஞானபாரதி மற்றும் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் சிம்மசந்திரன், ஐஐடியின் சென்னை அணுகல் தன்மை ஆய்வு மையத்தின் முதன்மை ஆய்வாளர் பேராசிரியர் ஹேமச்சந்திரன் உள்ளிட்ட பலர் இடம்பெற்று இருந்தனர்.
மாற்றுத்திறனாளிகளுடன் இந்த சந்திப்பின் போது ஒரு வீடியோ எடுக்கப்பட்டு இருந்தது. இந்த வீடியோ இப்போது ரீல்ஸ் ஆக மாறி இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை முதலில் தமிழக அரசு அதிகாரி ஒருவர் தான் எடுத்து வெளியிட்டதாக செய்திகள் பரவின.
ஆனால், இந்த வீடியோவை எடுத்தது அரசு அதிகாரி அல்ல. சந்திப்பின் போது உடன் இருந்த தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்க கூட்டமைப்பைச் சேர்ந்த சிம்மச்சந்திரன் என்பவர் தான் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ள விவரம் பின்னர் வெளியானது.
ஏற்கனவே திமுக தரப்பில், விஜயின் ஆட்சி இன்ஸ்டா ரீல்ஸ் ஆட்சி என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் சூழலில், முதல்வர் அறையிலேயே ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளது, பேசுபொருளாக மாறி இருக்கிறது.
ஏண்டா விசிலுக்கு வாக்களித்தோம் என் று மக்கள் விசன படும் காலம் வரும்.
சென்ற ஆட்சியில் மாண்புமிக்க முதல்வர் தினசரி போட்டோ ஷூட் எடுத்து வெளியில் ரீல்ஸ் போட்டுக்கொண்டிருந்தார். இப்போது வேறு யாரோ ரீல்ஸ் எடுக்கிறார்கள்
தெரியாமயா சொன்னாங்க
மூதாதைகள்
இதுல யாருக்கும் என்ன நழ்டம் .முதல்வர் வெளிப்படைத்தன்மையோட பணிக்கிறார் .அதைவெளியிடுவதில் என்ன தவறு.மேலும் தேவையான அனுமதி இல்லாமல் அவர்கள் செய்திருக்கமுடியாது .பாக்கெட்டில் கணம் இல்லையென்றால் வழியில் பயம் இல்லை .
அது மாண்புமிகு முதலமைச்சர் அறைடா...? மாண்புடன் நடந்து கொள்ள வேண்டிய அறைடா அது... தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்பமை அமைச்சர் அமர்ந்துள்ள அறையை... பப்ளிக் கக்கூஸ்ல வீடியோ எடுத்த மாதிரி சொல்ற...
sombu kanoj ... ஸ்டாலின் கூட சின்ன பசங்களை வச்சு ரீல் போட்டாரு
சிம்மச்சந்திரன் திமுகவில் ஒட்டிக்கொண்டு இருந்தார்.தற்போது தவெக வில் ஒட்டிக்கொள்ள முயற்சி செய்துள்ளார்
அனுமதி பெற்று வீடியோ எடுத்து , ரீலிஸ் வெளியிட்டால் எந்த தவறும் இல்லை . கருமம் பிடித்த தி மு க எல்லாவற்றையும் பிரச்சனை ஆக்க பார்க்கிறார்கள் . அவர்கள் எதிர் கட்சியாக்க இருந்து எந்த அரசாங்கத்தையும் நிம்மதியாக ஆட்சி செய்ய விடமாட்டார்கள் .
ஏலேய்... நீ அனுமதி பெற்று வீடியோ எடுத்தாங்கன்னு போட்டிருக்க...? முதலமைச்சர் அறை என்பது சினிமா ஷூட்டிங் நடக்குற படப்பிடித் தளமாடா...? அது, 8 கோடி மக்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் ஒரு தலைமை அமைச்சரின்... மாண்புமிகு முதலமைச்சரின் அறைடா..கிறுக்கா...? அங்க எப்படிடா அனுமதி கொடுப்பாங்க... யார் முதலமைச்சர் கொடுத்தார்னு சொல்றியா...?
இனி முதல்வர் அறைக்குள் நுழையுமுன் யாராக இருந்தாலும் சரி அரசாங்க அலுவலர்களாக இருந்தாலும் சரி சோதனை மேல் சோதனை போட்டுத்தான் அவர்கள் உள்ளெ நுழைய வேண்டுமென்ற நிபந்தனை இருக்க வேண்டும் இல்லையேல் இது தலைக்குமேல் போயிடும் பின்னால் வருந்தி பயனில்லை
முதல்வர் அறைக்கு செல்வதற்கு முன் யாரையும் பரிசோதிப்பது இல்லையா. எவ்வளவு பெரிய பாதுகாப்பு குளறுபடி. மொபைல் இருந்த இடத்தில் வேறு ஏதாவது வைத்து இருந்தால்??
எல்லா இடத்திலும் ரீல்ஸ், போட்டோ ஷூட் ஆட்சிதான் இப்போது இங்கு நடக்குது. வீட்டிலிருந்து டிபன்பாக்ஸ்சில் சாப்பாடு கொண்டு வந்து சாப்பிட்ட முதல்வர், மாணவிகளுடன் அமர்ந்து பன், பட்டர், ஜாம் சாப்பிட்ட ஆதவ் அர்ஜூனா இதைத் தாண்டி சொல்லிக் கொள்ளும் படியாக ஏதும் இல்லை. இதனோடு பதவி ஏற்ற மேற்கு வங்க அரசு புதுத் திட்டங்கள், அறிவிப்புகள் எனப் புலிப் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்க அரசே இயங்காத மாதிரி எல்லா இடத்திலும் ஓர் ஆழ்ந்த தேக்க நிலை உருவாகி உள்ளது மாதிரியான சூழல் தமிழகத்தில் இப்போது நிலவுகிறது.
ரியல் ஆட்சி அல்ல...ரீல்ஸ் ஆட்சி என்பதை நிரூபித்த தருணம்....? யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலை... அண்டங்காக்கைக்கும், குயில்களுக்கும் பேதம் தெரியலை”....ன்ற கவிஞரின் வரிகளுக்கேற்ப... ஒரு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அறையில் மொபைலில் வீடியோ பதிவு செய்யுற அளவுக்கு இருக்கு இந்த விஜய்...யின் ஆட்சி...?