கோடை மழை நம்பி வைகை கரையோர கிராம விவசாயிகள்

மானாமதுரை, மே 18–

மானாமதுரை வைகை ஆற்றை ஒட்டி உள்ள கிராமப்புற பகுதிகளில் நடைபெற்று வரும் கோடை விவசாயம் துவக்கியதால் கோடை மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

மானாமதுரை அருகே ராஜகம்பீரம், முத்தனேந்தல், பீசர்பட்டினம், கால்பிரவு, மிளகனூர், இடைக்காட்டூர், பெரியகோட்டை ஆகிய வைகை கரையோர கிராமங்களில் நெல்,வாழை, உளுந்து,எள்,பாசிப்பயறு சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது நெற்பயிர்கள் நன்கு வளர்ந்து பசுமையாக காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்வது போல் வானம் மேகம் மூட்டத்துடன் இருந்தாலும் மழை பெய்யாமல் ஏமாற்றி வருவதால் பயிர்களுக்கு தேவையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் விவசாயிகள் கோடை மழையை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மழை பெய்தால் பயிர்கள் மேலும் செழித்து நல்ல மகசூல் கிடைக்கும். வைகை ஆற்றில் போதிய நீர்வரத்து இல்லாததால் கிணற்று பாசனத்தை நம்பியே விவசாய பணிகள் நடந்து வருகிறது. இதனால் கோடை மழையை முழுவதும் நம்பியே விவசாயிகள் உள்ளனர்.

//

Advertisement