கூவனுார் டாஸ்மாக் கடை அகற்றப்படுமா?
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த கூவனுார் கிராம எல்லையில் இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூவனுார் கிராம எல்லையில் திருவண்ணாமலை – தியாகதுருகம் சாலையையொட்டி 100 மீட்டர் துாரத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இதனால் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த குடி பிரியர்கள் இங்கு வந்து மது அருந்தி விட்டு ரகளையில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும், கூவனுார் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் இருந்து மணலுார்பேட்டை அரசு பள்ளிக்குச் சென்று வீடு திரும்பும் மாணவிகளை மாலை நேரத்தில் கேலி செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது.
அதேபோல் மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டி மாநில நெடுஞ்சாலைக்கு வரும் குடி பிரியர்கள் அவ்வப்போது விபத்தில் சிக்கி உயிரிழக்கும் சம்பவமும் அரங்கேறி வருகிறது.
மேலும் இப்பகுதியில் இருக்கும் விவசாய நிலங்களை குடி பிரியர்கள் திறந்தவெளி பாராக பயன் படுத்துவதால் பயிர்கள் பாழ்படுத்தப்படுகிறது. எனவே, இங்கிருந்து மதுக்கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
புதிய வாகனத்தை இயக்கிப் பார்த்து முதல்வர் விஜய் ஆய்வு
-
அமைச்சரவையில் இடம்; விசிக, முஸ்லிம் லீக்கிற்கு தவெக அழைப்பு
-
ஈரானுக்கு எதிரான போரில் 42 விமானங்களை இழந்தது அமெரிக்கா
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு; வெள்ளி கிலோவுக்கு ரூ.15 ஆயிரம் சரிவு
-
ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றும் திட்டம் ஏதுமில்லை; சொல்கிறது நேட்டோ
-
10ம் வகுப்பு ரிசல்ட் வெளியானது; 94.31 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி