கள்ளழகர் கோயில் வசந்த உற்ஸவம்

அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் வைகாசி வசந்த உற்ஸவம், மே 22 முதல் 31 வரை நடக்கிறது.

மே 22 மாலை 6:30 மணிக்கு மேல் இரவு 7:30 மணிக்குள் உற்ஸவம் தொடங்குகிறது. பத்து நாட்களும் தினமும் மாலை 5:00 மணிக்கு சுவாமி புறப்பாடு நடக்கிறது.

ஆஸ்தானத்தில் இருந்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் புறப்பாடாகும் சுந்தரராஜ பெருமாள், ஆடி வீதியில் உலா சென்று, ராமர் சன்னதி வழியாக பதினெட்டாம்படி கருப்பணசுவாமி சன்னதி சென்று, அங்கிருந்து வசந்த மண்டபம் வந்தடைவார். 

அங்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜை, தீபாராதனை நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் இணை கமிஷனர் ஹரிஹரன் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Advertisement