ராமேஸ்வரம் கோவிலில் தி.மு.க., ஆட்சியில் லட்டு வழங்கியதில் ரூ.3.40 கோடி மோசடி: போலீஸ் விசாரணை முடக்கம்
ராமேஸ்வரம்: தி.மு.க., ஆட்சியில் ராமேஸ்வரம் கோவிலில் நடந்த, 3.40 கோடி ரூபாய் லட்டு மோசடி விவகாரத்தில், போலீசார் விசாரணையை துவக்காமல் உள்ளதால், ஹிந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடந்த 2024 முதல், 2026 மார்ச், 13 வரை ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் தினமும் பக்தர்களுக்கு இலவச பிரசாதமாக லட்டு வழங்குவதிலும், கோவில் வளாகத்தில் உள்ள கவுண்டரில், லட்டு விற்பனையிலும் முறைகேடு நடந்ததை, மார்ச் 14ல் கோவில் இணை ஆணையர் செல்லத்துரை ஆய்வு செய்தார்.
இதில், 3.40 கோடி ரூபாய்க்கு லட்டு மோசடி செய்த கோவில் ஊழியர்கள் பஞ்சமூர்த்தி உட்பட, 6 பேர் மே 14ல் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
இதன் பின், சஸ்பெண்ட் செய்த ஊழியர்கள், தற்காலிக ஊழியர்கள் உட்பட, 9 பேர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து, மோசடி செய்த பணத்தை பெற்று கோவில் நிர்வாகத்திற்கு வழங்குமாறு, மே 15ல் ராமநாதபுரம் எஸ்.பி., சந்தீஷிடம் கோவில் இணை ஆணையர் மனு அளித்தார்.
ராமேஸ்வரம் கோவிலில் லட்டு மோசடி விவகாரம் நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தி.மு.க., ஆட்சியில் நடந்தது என்பதால், பின்னணியில் ஆளும்கட்சி முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கலாம் எனவும், விசாரணையை உயர் போலீஸ் அதிகாரி தலைமையில் தீவிரப்படுத்தினால் மட்டுமே உண்மை வெளிச்சத்திற்கு வரும்.
இச்சூழலில் புகார் செய்து இன்றுடன், 5 நாட்கள் ஆகியும், இது நாள் வரை போலீசார் விசாரிக்காமல் முடங்கி உள்ளனர். இதனால் மோசடி செய்தவர்கள் மற்றும் இதில் தொடர்புடைய முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள் தப்பிக்க வாய்ப்பு உள்ளது.
ஹிந்து அமைப்பினர் கூறுகையில், 'தி.மு.க., ஆட்சியில் நடந்த மோசடியை போலீசார் விசாரிக்க தயங்கும் மர்மம் என்ன. இந்த விஷயத்தில் முதல்வர் விஜய் தலையிட்டு, விசாரணையை துரிதப்படுத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என்றனர்.
கடந்த அரசே மோசடி அரசு. எல்லாம் நம் தமிழகத்தின் சாபக்கேடு. இப்போது உள்ள அரசு , மக்கள் மையம் கட்சியின் நிலைப்பாட்டில் கால் பங்கு கலந்து விட்டது. மீதி பொறுத்திருந்து பார்ப்போம்?
தீயமுக என்றாலே தீய திருட்டு சக்தி தானே.அது திருடாமல் இருந்தால் தான் ஆச்சரியம்.
எல்லாரும் திருடனுக
மானிலத்திலும்
மத்தியிலும்
ஓர் 10 ஆண்டு ........ ஆட்சி வரனும்
வரும்... ஆனா வராது...
ஶ்ரீ ராமேஸ்வரம், திருவண்ணாமலை.. போன்ற முக்கிய கோவில்கள் ஆன்மிகம் பின்பற்றி பூஜித்து மக்கள் வழிபட்டு மேன்மை அடைய கட்டப்பட்ட திருத்தலங்கள். இங்கு வேலை செய்வது ஒரு பாக்கியம். கோவில் பணியாளர்களுக்கு இறை நம்பிக்கை தேவை . திமுகவின் கோவில் பணி நியமனத்தில் திருடர்கள், நாஸ்திகர்கள். கல்விக்கு மேல் புலால், போதை பழக்கம், குற்ற பின்னணி இல்லாத நபரை நியமிக்க நீதிமன்றம் ஆவண செய்ய வேண்டும். விஜய் ஆட்சி அடித்தளம் இல்லாதது. திமுக ஆட்சி 3.40 கோடி ரூபாய் திருட்டை முடக்கினால் தான் நீடிக்க முடியும்.
கருத்து போடுவதுடன் முடிந்தது. ஒன்றும் செய்ய முடியாது. எப்போது பிஜேபி உள்ளே நுழைகிறதோ, அப்போது தான் இதற்க்கு விடிவு
சாமியே பாத்துக்கிட்டு சும்மா இருக்கு.இனி நீங்க யாரையா?
திருடினது திமுக அல்லக்கை.. உன்னோட ஆதரவு உண்டு. திருடனுக்கு இன்னொரு திருடன் தான் வக்காலத்து .
வழங்கிய லட்டுகளில் 3.40 கோடி மோசடி. வழங்கியதாக சொல்லி வழங்காமல் முழுங்கியதில் இன்னமும் எவ்வுளவோ கோடியோ
நல்ல வேளையாக திருப்பதி ஆந்திராவுக்கு போய்விட்டது. இந்த நாசக்கார நாத்திக கும்பல் கையில் கிடைத்து இருந்தால். நினைக்கவே பயமாய் உள்ளது.
ராம்கிருஷ்ணா, திருப்பதி லட்டு கலப்பட நெய் சந்தி சிரிக்கிதே.. தெரியாதா?
you do not know mega frauds in Tirupati widely reported in media ? !
sankar also sold same fraud laddu....useless
ஹிந்து கோவில்களின் வருமானத்தை திருடி மசூதியிலும் சர்சிலும் மாட்டுக்கறி சாராயம் மேற்படி மேற்படி என்று குஜாலாக செலவு செய்ய வைத்து ஓட்டு பிச்சை எடுக்கும் ஆப்ரஹாமிய அடிமை அரசுகளும் தற்போதைய அல்லேலூயா அரசும் எப்படி நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்க இயலும்? ஹிந்து தர்மத்தை சிதைத்தால் சொர்க்கம் சாராயம் கன்னிகள் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளவர்களுக்கு ஓட்டு போட்டு தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுக் கொண்ட தமிழக ஹிந்துக்களுக்கு புலம்பும் உரிமை கூட கிடையாது...மேலும்
-
புதிய வாகனத்தை இயக்கிப் பார்த்து முதல்வர் விஜய் ஆய்வு
-
அமைச்சரவையில் இடம்; விசிக, முஸ்லிம் லீக்கிற்கு தவெக அழைப்பு
-
ஈரானுக்கு எதிரான போரில் 42 விமானங்களை இழந்தது அமெரிக்கா
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு; வெள்ளி கிலோவுக்கு ரூ.15 ஆயிரம் சரிவு
-
ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றும் திட்டம் ஏதுமில்லை; சொல்கிறது நேட்டோ
-
10ம் வகுப்பு ரிசல்ட் வெளியானது; 94.31 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி