3.5 பவுன் நகையை தவறவிட்ட ரயில் பயணி

திண்டுக்கல்:திண்டுக்கல் ரயில் நிலையத்தில் பயணி தவறவிட்ட 3.5 பவுன் நகைகள் இருந்த பையை ரயில்வே போலீசார் மீட்டனர்.

கடலுார் மாவட்டம் பரங்கிப்பேட்டையை சேர்ந்தவர் ஜெயினுல் அபுதீன் 28. இவர் மே 16 இரவு தனது மனைவி, 2 மகள்களுடன் சிதம்பரம் செல்ல திண்டுக்கல் ரயில் நிலையம் வந்தார். நடைமேடை எண் 3ல் நின்ற மஹால் அதிவிரைவு ரயிலின் பொதுப்பெட்டியில் அவசரமாக ஏறினர்.

அப்போது அவரது குழந்தை வைத்திருந்த கைப்பை தவறி நடைமேடையில் விழுந்தது. ரயில் புறப்பட்ட நிலையில் அதிர்ச்சி அடைந்த ஜெயினுல் அபுதீன் உடனடியாக திண்டுக்கல் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இன்ஸ்பெக்டர் வீரம்மாள், போலீசார் ராஜா சந்திரசேகரன், மருதராஜா, விஜயகுமாரி ஆகியோர் நடைமேடையில் கிடந்த கைப்பையை மீட்டனர். அதில் 3 மோதிரம், கைச்செயின், ஒரு ஜோடி கம்மல் உள்பட 3.5 பவுன் நகைகள் இருந்தது.

கைப்பை மீட்கப்பட்டது குறித்து ஜெயினுல் அபுதீனுக்கு தகவல் தெரிவித்து நகைகளை அவரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement